Thursday 28 April 2016

உயிர்ப்பு - சிறுகதை

1. உதயம்.

வெண்பனி போர்த்திருந்தது. மரங்கள் நிலவில் குளிர்ந்திருந்தன. கண்கள் அரைத்தூக்கத்தில் செருகிக் கொள்ள போர்வைக்குள்ளிருந்து விழித் தெழும் மனிதர்கள்.

வெளியே ஆரவாரம். ஏதோ ஒரு கலவரத்துடன் தெருவில் விரைந்து கொண்டிருந்தார் பொன்னம்பலம். வெறும் மார்பு. மயிர்க்கால்களில் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டுகின்ற குளிர் - நரம்பை சில்லிட வைக்கும் குளிர்.

“சங்கதி தெரியுமா?”
“என்ன?”

“நேற்றிரவு அம்மன் கோயில் சிலை களவு போயிட்டுது.”

Monday 25 April 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

by
Kathir Bala Sundaram


Chapter 6

Going to the Tiger’s Den


Early the next day, Principal Vasantha Velautham stood in front of her office and watched the students and teachers entering the college compound in continual white waves. Her eyes sought out three specific individuals. The first was the Vice Principal, Mrs. Priya Shan, the second was Monitor Sendhoory, and the last was the day gate sentry, Raman.

She impatiently signaled the night sentry, Manian, with a wave of her index finger. The young man, dressed in khaki shorts and a yellow shirt, sprinted over to her from his position by the gate. “Madam?” he asked politely.

“Where is Raman? Shouldn’t he be here by now?”

“I don’t know, Madam.”

Wednesday 20 April 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (11)

 நீராவிக் குளியல் சவுனா (sauna)

சுடுநீர்க்குளியல் / நீராவிக்குளியல் என்று சொல்கின்றார்களே அதை ஒரு தடவை பார்த்துவிடலாம் என்ற நோக்கில் இந்தவருடத் தொடக்கத்தில்  Peninsula Hot Springs இற்குச் சென்றோம். இது மெல்பேர்ணில் Mornington Peninsula வில் அமைந்துள்ளது. 90 நிமிடப் பிரயாணம். இங்கே Natural thermal mineral water ஐப் பாவிக்கின்றார்கள்.

சும்மா சொல்லக்கூடாது. நுழைவுக்கட்டணம் அதிகம் என்றாலும் பெறுமதி மிக்க இடம். சீனர்களும் வியட்நாமியர்களும்தான் அங்கே பெருமளவு நின்றிருந்தார்கள். மருந்துக்கும் நமது தோலில் இல்லை. எல்லாரும் குளியலில் மூழ்கி இருந்தார்கள். இளமையை மீண்டும் பெறவும் ஆறுதலடையவும் மனதை இதமாகவும் வைத்திருக்கின்றன இவை என்று சொல்கின்றார்கள். அங்கே சின்னதும் பெரியதுமாக ஏறத்தாள 30 குளியல் இடங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

Friday 15 April 2016

’ரிப்ஸ்’ சிறுகதை


ஒன்றை நினைத்து -  முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும்.

வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது.

‘ஃபரடைஸ்’ ஹோட்டலில் சாப்பிடுகிற அளவுக்கு இப்ப காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக் கொண்டுவந்து வைத்தான்.

“அட முப்பது ரூபா…”

Tuesday 12 April 2016

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 3)

சிசு.நாகேந்திரன்

     
தலைமுறை இடைவெளி

முதியோரின் பங்கு

முதியோரின்  பொறுப்புகள்

மற்றவர்களுக்குப் பாரமா?

சுத்தம்: / வாய்ப்பேச்சு: / வரவும் செலவும்: / பொருட்கள் பாவனை: / சாப்பாடு:

உடைகள்: / அறளை பெயருதல் - மறக்கக்கூடியவற்றை முன்கூட்டியே குறித்துவைத்தல் / குளியலறை - கழிவறை பாவிப்பு: / மரணசாசனம்:

சிற்றூர்தி (car)  – பிரயாணம்: / Visits,  pleasure trips:

முதியோரைத்தான் சாட்டுவார்கள்: / வீட்டுக்குக் காவல்:

Sunday 10 April 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

by
Kathir Bala Sundaram

Chapter 5
Injured Tigers

The brand new, green Mitsubishi Pajero flew down the A9 Highway at speeds often exceeding 100 kph. It was returning to Kilinochchi along the same route it had already traveled earlier that day. The Minister stared moodily out the window as they raced through the small village of Meesalai. He hardly took note of the beautiful coconut groves, mango trees, and palmyra palms as they flew by. Most of the houses sat in small compounds, surrounded by tall fences and covered with coconut leaved cadjans* to keep prying eyes from peering in.

A bit further on, they passed through the small town Mirusuvil. On both sides of the highway, the miles and miles of coconut estates showed the horrible effects of war before the Cease Fire Agreement had come into effect. More than quarter of the coconut palms had no fronds, many little more than shattered trunks looking like cannons pointed into the sky. The destruction of the air force didn’t stop there, however, and the hundreds of maimed individuals who roamed the streets giving mute testimony to the magnitude of the devastation the war had caused.

Friday 8 April 2016

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 2) - சிசு.நாகேந்திரன்

தலைமுறை இடைவெளியை நிரப்புவது எப்படி?

      தலைமுறை இடைவெளி என்னும்போது, புலம்பெயர்ந்திருக்கும் ஒரு தலைமுறை யினருக்கும் அவர்களுடன் வாழும் (புலம்பெயர்ந்த) பெற்றோருக்குமிடையில் ஏற்படும் இடைவெளியிலும் பார்க்க, முதியோருக்கும் அவர்களின் பேரப்பிள்ளைகளுக்குமிடையில் காணும் இடைவெளிதான் முக்கியமானதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்இவ்விடைவெளியை அவசியம் நிரப்பியே ஆகவேண்டும்.   ஆகவேமுதியோர், பெற்றோர், பேரப்பிள்ளைகள் என மூன்று வெவ்வேறு தலைப்புகளின்கீழ் இவற்றை நாம் ஆராய்வோம்.

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 1) - சிசு.நாகேந்திரன்

முன்னுரை:

      உலகத்தில் பிறந்த எந்த மானிடனுக்கும் தான் கனகாலம் வாழவேண்டும், உலக விடயங்களை அனுபவித்து இன்பம் எய்தவேண்டும் என்ற பேராசையே அவனைப் பிடித்து ஆட்டுகிறது.  ஆனால் உண்மையில் தனது முதுமைக்காலத்தில் அனுபவிக்கப்போவது நரகமேயொழிய சுவர்க்கமல்ல என்பதை அவன் இளமையாக இருக்கும்போது உணரத் தவறிவிடுகிறான். இன்னுமொரு விதமாகச் சொல்லப்போனால் வயது முதிர்ந்தவர்கள் தங்கள் தினசரிவாழ்க்கையில் சந்தோம் அனுபவிப்பதிலும்பார்க்க துக்கத்தையும் வேதனையையும்தான் அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்பது கண்கூடு.  மேலை நாடுகளில் நிலவும் விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் உடலாரோக்கியம் மற்றும் உளவளம் சம்பந்தமான கண்டுபிடிப்புகள் காரணமாக வியாதிகள் பீடிப்பதைக் கட்டுப்படுத்தியும், நோய்; வந்தபின்னர் அவற்றிற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் நோயினால் ஏற்படக்கூடிய வேதனைகளையும் நோவையும் ஓரளவுதான் கட்டுப்படுத்தலாம். ஆனால் நோய் வராமலோ, அதன் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ளவோ முடியாது. அது பிராரப்தத்தின் நியதி.  ஒரு வியாதியினால் ஏற்படும் வலியை மருந்துகள் மாத்திரைகளை உட்கொண்டு ஓரளவு குறைக்கமுடிந்தாலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதவை.  அது வேறொரு வேதனையை அல்லது நோயைத் தந்துவிடும்.  ஒரு மருந்தை உட்கொண்டு வியாதி குணமடைந்த பின்னர் அதன் பலனாக வேறொரு வியாதி உடம்பில் தோற்றுவதை அடிக்கடி நாம் காணக்கூடியதாக இருக்கிறது.  சில மருந்துகள் எதிர்விளைவுகளைக்கூட ஏற்படுத்திவிடுகின்றன. 

Monday 4 April 2016

மேலதிகாரி - ஒரு கணிதவிற்பன்னர்

 
 அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.

பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர் ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.

Friday 1 April 2016

படம் பார்க்கப் போகின்றோம்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை - 16

படம் பார்க்கப் போகின்றோம் என்றார் அப்பா. வாத்தியார். கறார் பேர்வழி. கோவிலைத் தவிர எங்கும் போகவிடமாட்டார்.

ரவுணிற்குக் காரில் போனோம். குதூகலம். ’திருவிளையாடல்’ பார்த்ததில் ஒருவருக்கும் மகிழ்ச்சியில்லை.

பிரச்சினை அடுத்தவாரம் ஆரம்பித்தது. எல்லாரையும் இருத்தி பார்த்த படத்திலிருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். கட்டுரை எழுதச் சொன்னார். போதும் என்றாகிவிட்டது.

திஜேட்டரில் ’தெய்வம்’ படம் மாற்றப்படும்வரை வில்லங்கம் தொடர்ந்தது.

“ரவுணிலை நல்ல படமொண்டு ஓடுதாமே!” அப்பா ஆரம்பிப்பதற்குள்..... ஒருவரையும் காணோம்.