1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த
மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல
மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா
ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை
தாய்மொழியாகக் கொண்டவர்.
வாசுதேவன் நாயர் எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர்,
திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பலதுறைகளில் இயங்கியவர்
‘மஞ்சு’ என்றதும் என் மனதில் முதல் பதிவாகியது ஒரு
பெண்ணின் கதை என்பதுதான். ஆனால் ‘மஞ்சு’ என்பது அந்தப்பெண்ணின் பெயர் அல்ல.
தமிழில் ‘மஞ்சு’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தபோதும் இங்கே ‘மூடுபனி’ என்பதே
பொருத்தமாக அமைகின்றது.