Tuesday 15 January 2019

யாரோ ஒளிந்திருக்கின்றார்கள் - சிறுகதை


(ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன்செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2018 இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

”சேர்! எங்கே என் மனைவி உமா? வழமையாக எட்டு மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவாரே…” காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வந்த களைப்பில், மனைவியைக் காணாத அதிர்ச்சியுடன் கேட்டான் சிறீபாலன்.

“பயப்படாதீர்கள்! இன்னும் அரைமணி நேரத்திற்குள் இங்கு வந்துவிடுவார். இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நீங்கள் வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள். அங்கே நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அல்லது ரெலிவிஷன் பார்க்கலாம்” சொல்லியபடியே அந்த ஆண் தாதி சிறீபாலனை நிமிர்ந்து பார்த்தார். பார்த்த மாத்திரத்தில், சிறீபாலனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது எனக் கவலை கொண்டார். அவருக்கு அருகே இருந்த பெண் தாதி மேசையில் குனிந்தபடி அவசர அவசரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

Monday 14 January 2019

ரெஸ்டாரண்ட் சாப்பாடு - சிறுகதை



பாபுவின் பிள்ளைகள் ரெஸ்டாரண்டில் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் நண்பர்கள், “நான் மலேசியா ரெஸ்டாரண்டில் சாப்பிட்டேன்… நான் சைனீஷில் சாப்பிட்டேன்…. நான் கொரியனில் சாப்பிட்டேன்” என்று சொல்லும்போது அவர்கள் வாய் ஊறும்.

“ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது. ஒரே கொழும்பு” என்று சொல்லுவார் தந்தை பாபு. சமயத்தில் சில ரெஸ்டாரண்ட் வீடியோக் கிளிப்புகளையும் எடுத்து விடுவார். அது ரெஸ்டாரண்ட் வண்டவாளங்களையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும்.

மனைவி சித்திரா ஒரு அப்பிராணி. ஏதோ ரெஸ்டாரண்ட் சாப்பாடு தனக்கும் ஒத்துவராது என்பதுமாப்போல் இருந்துவிடுவாள்.

ஒருநாள் பாபுவின் மனம் கல்லுக்குள் ஈரம் என்பதுமாப் போல் இளகியது. எந்த ரெஸ்டாரண்ட் நல்லது என நெட்டில் உசாவினார்.