Tuesday 21 February 2017

கார் காலம் – நாவல்


அதிகாரம் இரண்டு : கார் தொழிற்சாலை 

நந்தன் இலங்கையில் படித்தது ஒன்று. அவுஸ்திரேலியாவில் இன்று வேலை செய்வது இன்னொன்று. அவன் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டுதான் அங்கு வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத் தொழிலாளிக்கே அங்கு மணித்தியாலம் 25 டொலர்கள் கொடுத்தார்கள்.

மனித சஞ்சாரமற்ற வனாந்தரங்களாலும் புல்வெளிகளாலும் பரவிக் கிடக்கும் அவுஸ்திரேலியப் கண்டத்தில் - அமைதியான ஒரு கிராமத்தின் பெருநிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது அந்தத் தொழிற்சாலை. தொழிற்சாலையின் ஒரு புறத்தே இருபத்துநான்கு மணி நேரமும் கடகடத்து ஓடும் வாகனங்கள் நிரம்பிய வீதியும் வானளாவிய கட்டடங்களும், ஏனைய மூன்று பக்கங்களும் புல்வெளியும் புதரும் ஓடையுமாகக் கொண்டுள்ளது.

Tuesday 14 February 2017

கார் காலம் – நாவல்


(புலம்பெயர்வாழ்வு என்பது எமக்கு மட்டும் உரித்தானது அன்று. அது பல்லின மக்களும் சார்ந்தது. இந்த நாவல் அவர்களின் கலாச்சார ஒழுக்க பிறழ்வுகளை முன் வைக்கின்றது.)


அதிகாரம் ஒன்று : அவள் பெயர் ஆலின் 

நந்தன் அவுஸ்திரேலிய தென்னந்தத்தில், மெல்பேர்ண் நகரின் எல்லைப்புறத்தில் அமைந்த கார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்றுதான் முதன் முதலாக நந்தன் அவளைச் சந்தித்தான்.

வாழ்க்கை எல்லா நாட்களையும் போல சாதாரணமாக அமைந்து விடுவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான்.

இளவேனிற்காலம். குளிர்ந்த ஒரு மாலைப் பொழுது. இரண்டாவது 'ஷிவ்ற்'. வேலை ஆரம்பிக்கும் கலவரத்தில் தூரத்தே போன அந்தக் கும்பலை நந்தன் காணவில்லை. நண்பன் சப்பை மூக்கு ஒக்காராதான் அவர்களைச் சுட்டிக் காண்பித்தான். கம்பனி நிர்வாகம் புதிதாக வேலைக்கு எடுப்பவர்களை தொழிற்சாலையை சுற்றிக் காட்டுவதுண்டு. வெள்ளை நிற 'ஓவரோலில்' (overall) ஒன்றன்பின் ஒன்றாக -  ஆண்களும் பெண்களும் அடுத்த 'செக்‌ஷனிற்குள்' போய்க் கொண்டிருந்தார்கள். வெள்ளை மஞ்சள் மண்ணிறம் கறுப்பு என பல்லினமக்கள். நிறத்தில் மாத்திரமல்ல, உருவ அமைப்பிலும் வேறுபாடுகள்.

அவர்களுள் தன்னந்தனியனாக துருவ நட்சத்திரம் போல அவள் தோன்றினாள். நந்தனின் மனம் திடுக்குற்றது. மாதவியா?

Monday 6 February 2017

வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்த காலத்தில் (1977) கலாசாரமும் பண்பாடும் என்றொரு பாடம் இருந்தது. அதனை கதிர்.பாலசுந்தரம், த.சண்முகசுந்தரம் என்போர் நெறிப்படுத்தினார்கள். பாடத்திட்டத்தின்படி நாங்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வோரு குழுக்களும் எழுத்தாளர்/கலைஞரைச் சந்திக்க வேண்டும்.

குரும்பசிட்டி ஊர், எழுத்தாளர்கள் கலைஞர்களுக்குப் பேர் போனது. எனது தந்தையாரின் ஊரும் அதுதான். நான்  எனது குழுவினருடன் அங்கு சென்று இரசிகமணி கனக.செந்திநாதனைச் சந்திக்க முடிவு செய்தோம். எனது குழுவில் முரளிதரன், குகநேசன் இன்னும் சிலர் இருந்தார்கள்.

Sunday 5 February 2017

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்


அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்

1 ஆம் இடம்
’ஜென்மநிழல்’
கெகிறாவ ஷகானா
கெகிறாவ - ஶ்ரீ லங்கா

2 ஆம் இடம்
’காதல்கவிதை விலாசம்’
மொகமட் ராபி
356/7 கண்டி வீதி
பாலையூற்று - திருகோணமலை

3 ஆம் இடம்
’அரங்கன் கணக்கு’
என்.கணேசன்
W- 80 கோவைபுகார்
கோயமுத்தூர் 641042
தமிழ்நாடு - இந்தியா

*************************

ஆறுதல் பரிசுபெறுபவர்கள் 

Saturday 4 February 2017

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள்

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் 

1 ஆம் இடம்

’லிவிங்டு கெதர்’

மேரிதங்கம் சில்வியா மேரி,

சென்னை


2 ஆம் இடம்.

’செல்லம்மா’

பர்வீன் பானு

86/2 நாட்டுமுத்து தெரு ,முதல் மாடி

தேனாம்பேட்டை, சென்னை 600018


3 ஆம் இடம்.

’வக்காத்துகுளம்’

தீரன் ஆர்.என்.நெளஷத்

சாய்ந்தமருது - ஶ்ரீ லங்கா
-------------

ஆறுதல் பரிசு

Wednesday 1 February 2017

பார்ப்பதற்கும் வாங்குவதற்கும் - குறும் கதை



(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)


படிக்கும் காலத்தில் மணிக்கூடு பெல்ற் போன்றவற்றை வாங்குவதற்கு நண்பன் விஜயனை கூட்டிச் செல்வோம்.

பல கடைகள் கூட்டிச் செல்வான். ஏறி இறங்கி சலித்துப் போவோம்.

“ஏன் மச்சான்… இந்தக் கடையிலை மலிவாக நல்லது இருக்கே! வாங்குவமா?”

”இதெல்லாம் சும்மா பாக்கிற கடை. வாங்கிறதுக்கெண்டு ஒரு கடை இருக்கு. வாருங்கள் அங்கு போவம்” என்பான் விஜயன்.

அப்படித்தான் அவனின் திருமணமும் நடந்தது.