Friday 3 May 2024

ஸ்பெசிமன் றைற்ரேர்ஸ் (Specimen Writers) - கங்காருப்பாய்ச்சல்கள் (45)

 
அவர் எத்தனையோ ஆயிரம் கட்டுரைகள் எழுதிவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் அவர் ஐந்தோ ஆறோ கட்டுரைகள்தான் எழுதியிருப்பார். பல்கலைக்கழகங்களில் ’ஸ்பெசிமன் – specimen’ – அதாவது ’மாதிரி’ – நாலைந்து உலாவும். அதைப் பார்த்து, அதே போல பாடத்திட்டங்களுக்கான coursework ஐ மாணவர்கள் செய்துவிடுவார்கள். ஸ்பெசிமன் இல்லாவிட்டால் அதோ கதிதான்.

இவரும் அப்படித்தான். தானே எழுதிவைத்த ஸ்பெசிமனை - வேண்டும்போது விரித்தோ சுருக்கியோ பட்டை தீட்டியோ எழுதிவிடுவார். இவரது எழுத்தை முதலில் படிப்பவர்களுக்கு அது ‘அச்சா’வாக இருக்கும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு ‘சூச்சா’வா இருக்கும். தலை கிறுகிறுக்கும். அந்த ‘மாதிரி’யில் கோடிட்ட இடங்களை நிரப்பி நேரத்திற்கு நேரம் எழுதிவிடுவார்.

அரைத்த மாவை திரும்ப அரைப்பதும், ஒரே தோசையை திரும்பத் திரும்ப வழம் மாத்தி வழம் மாத்திப் போட்டுக் கருக்கி வாசனை உண்டாக்குவதும் அழகல்ல.