Saturday 25 July 2020

`தேவரின்’ திருவருள் - Flashback




கொரோனா காலத்தில் முடங்கிப் போயிருக்கும் இவ்வேளையில், பலரும் திரைப்படங்கள் பார்க்கின்றார்கள். புதிய படங்கள் என்று இல்லாமல் பழைய படங்கள் கூட  தூசு தட்டப்படுகின்றன. நேற்று நண்பன் நேசனுடன் கதைக்கும்போது, தான் `தேவரின் தெய்வம்’ படம் பார்த்தேன் என்றான். பள்ளி நண்பனாகிய அவன் அதிகம் பக்திப் படங்கள் தான் பார்ப்பான். அவன் அதைச் சொன்னதும் தொபுக்கடீர் என்று சிரித்துவிட்டேன். அதன்பிறகு கதைத்து முடிக்கும் வரையும் சிரிப்புத்தான் கொடுப்பிற்குள் நின்றது.

Monday 13 July 2020

கார் போலக் கார் வேண்டும்

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

நாட்டுக்குப் புதிதாக வந்த நண்பர் கார் வாங்க உதவும்படி கேட்டார். அவருடன் போகாத இடங்கள் இல்லை. பார்க்காத கார்கள் இல்லை. சிலதைப் பார்த்தார். பலதைத் தவிர்த்தார்.

“ஏன் ஒன்றுமே பிடிக்கவில்லை?” சலிப்புடன் நான்.

“எனக்குக் கார் போலக் கார் வேண்டும்.” ஆர்வத்துடன் அவர்.

“அப்படி என்றாள்?”

“சிறுவயதில் எப்படிக் கார் வரைந்தீர்கள்? அந்த வடிவத்தில் கார் வேண்டும்!”

திகைத்துப் போனேன். இந்த மனிதர் எந்த உலகத்தில் இருக்கின்றார்?


Friday 10 July 2020

மாதவியா? காஞ்சனாவா?

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பாலன் இலங்கையில் இருக்கின்றான்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் தந்தையுடன் கதைக்கும்போது,

“உனக்குக் கோவலன் கண்ணகி காஞ்சனா கதை தெரியும் தானே!” என்றார் அப்பா.

`அப்பாவுக்கு மாறாட்டம் பிடித்துவிட்டதா?’ யோசித்தான் பாலன். காஞ்சனா அப்பாவின் தங்கை பெண். அவுஸ்திரேலியாவில் அப்பாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்றாள்.

“என்ன அப்பா சொல்கின்றீர்கள்? கோவலன் கண்ணகி மாதவி அல்லவா?”

“அடப் போடா…. உனக்கு இப்பவே மாறாட்டம்.”

`ஏதோ உள் குத்து இதில் இருக்கவேண்டும்’ நினைத்தான் பாலன்.


Wednesday 1 July 2020

`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’


இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள்.

தமிழ்மக்கள் இப்படி வரும்போது நான் ஒடுங்கிப் போவேன். அவர்களுக்கு நான் ஒரு தமிழச்சி எனக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் அதை அனுகூலமாக்கிக் கொண்டுவிடுவார்கள்.

இரவு பத்துமணி இருக்கும். ஒருவர் தலைவிரி கோலத்தில் வந்தார்.