(50 வார்த்தைகளுக்குள் ஒரு
குறும் கதை)
”பெண்விடுதலையும்
மாதர்சங்கமும்… ராட்டினம்
போல சுழலுறாள்” தினமும்
மருமகள் வெளிக்கிடும்போது மாமியாரின் அர்ச்சனை.
ஒருமுறை
‘தீம் பார்க்’கிற்கு சென்றார்கள். குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க மாமியாருக்கு
ஆசை வந்தது.
இதுவே நல்லநேரம். மருமகள் சொன்னார்,
“மாமி! ராட்டினத்திலை ஏறுங்கோ. சுப்பரா இருக்கும்.”
ராட்டினம் மாமியாரை சுழட்டி ஆட்டியது, உலுப்பியது, தொப்பெனக் கீழே போட்டது. ஐயோ! அலறினார்.
இறங்கியதும் மருமகளை முழுசிப்
பார்த்தார். பின்னர்
ராட்டினம் என்று மருமகளை என்றுமே சொன்னதில்லை.