Wednesday, 21 February 2018

முகநூல் நண்பர் தங்கேஸ் மறைவு


நேற்றைய தினம் (20.02.2018) வேலை முடித்து வீடு வந்ததும், முகநூலைத் திறந்தபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தங்கேஸ் இராசையா காலமாகிவிட்டார் என்ற செய்தி. என்னுடைய வயதுதான் அவருக்கும் இருக்கும்.

2015 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முகநூலின் மெசஞ்சர் (messenger) மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். கதிர்.பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘வன்னி’ நாவலினால் ஈர்க்கப்பட்டு, அதன் புத்தக வடிவத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அப்போது ‘வன்னி’ நாவல் எனது blog இல் தொடராக வந்துகொண்டிருந்தது.

Thursday, 15 February 2018

முறே ஆறு (Murray River)

ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் மிக நீண்ட ஆறு முறே (Murray River) நதியாகும். ஏறத்தாழ 2508 கி.மீ நீளமுடையது. இது ‘அலப்ஸ்’ மலைத்தொடரில் உற்பத்தியாகி, அவுஸ்திரேலியாவின் அதியுயர் மலைகளின் மேற்குப்புறமாக வடிந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களைக் கடந்து தெற்கு அவுஸ்திரேலியாவை வந்தடைகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ்சான்றினா ஏரியை (Lake Alexandrina) வந்தடையும் ஆறு பின்னர் இந்துசமுத்திரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கலக்கின்றது.

Murray Mouth என்னும் இடத்தில் உப்புநீரும்salt water) நல்லநீரும் (fresh water) கலக்கின்றன

கண்டங்களில் மிகவும் வறட்சியான அவுஸ்திரேலியாவின் பயிர்ச்செய்கைக்கு முறே ஆறு பெரும் பங்காற்றுகின்றது, 

Thursday, 8 February 2018

கறுப்புத்தானே இப்ப காப்பாற்றுகின்றது!

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

”கமலா…. சரியான கறுப்பு.”
சந்திரனின் காதலை, அக்கா சுகந்தி தீவிரமாக எதிர்த்தாள்,.

சந்திரனின் தாயாரின் முயற்சியால் திருமணம் இனிதே நடந்தது.

எல்லாரும் அகதியாக அவுஸ்திரேலியா குடியேறுகின்றனர்.
அம்மாவைக் கூப்பிட்டது மகன். அம்மாவுக்கு சென்ரர்லிங் காசு வருவதால், அம்மாவை வைத்திருப்பது மகள்.

அம்மா இப்போது மூப்படைந்து விட்டாள். நோயினால் மலசலம் எல்லாம் படுக்கையுடன்.

”வீடு மணக்கின்றது. போய் மகனுடன் இருங்கள்” கலைத்துவிட்டாள் சுகந்தி.


மாமியாரை எந்தக் குறையுமின்றிப் பார்க்கின்றாள் மருமகள்.

Thursday, 1 February 2018

நீலத் தாமரை (Blue Lotus Water Garden)

ஊர்சுற்றிப் புராணம் -மெல்பேர்ண்

மெல்பேர்ணில் இருந்து காரில் சென்றால், ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் யாராவலியை (Yarra Junction / Yarra Valley) அடைந்துவிடலாம். அங்கேதான் இந்த இந்த அற்புத தாமரைத் தடாகத்தைக் கண்டு கொண்டேன். மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை (கோடை / இலையுதிர்காலம்) பார்வைக்காகத் திறந்திருக்கின்றார்கள்.

2006 ஆம் ஆண்டு Geoff, Yvonne என்பவர்களால் இது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  50,000 சதுர மீற்றர் (14 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த நீர்த் தோட்டத்தில் தாமரை, நீலோற்பலம் மற்றும் அரிய வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்த்தாவரங்கள் உள்ளன. இங்கே 12 குளங்கள், 2 ஏரிகள், பல நீரூற்றுகள் உள்ளன. இவற்றை பாலங்களும் நடைபாதைகளும் இணைக்கின்றன.