மின் இணைப்பு
அவன் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான். வீட்டின்
முன்புறத்தில் ஒருவர் கார் கழுவிக் கொண்டிருந்தார்.
|பெரியவரே, நீங்கள் எந்தக் கம்பனியின் மின் இணைப்பைப்
பாவிக்கின்றீர்கள்?|
ஈரம் சொட்ட நின்ற அந்த வீட்டு மனிதர், அந்தப் பையனை
நிமிர்ந்து பார்த்தார். தோளிலே ஒரு சீலைப்பை. கையில் ஒரு ஃபைல்.
|அதை நான் உனக்கு சொல்லப் போவதில்லை.| மூச்சிரைக்கச்
சொன்னார் அவர். கார் கழுவுதல் என்பது இலகுவான வேலையல்ல. தனது வேலைக்கு இடையூறு
தருகின்றானே என்பது அவர் கோபம்.
|எல்லா வழங்குனர்களையும்விட உங்களுக்கு மிகவும் குறைவான
விலையில் நாம் தருவோம்.|
|கெதியிலை இந்த இடத்தை விட்டுப் போய்விடு. எனக்கும்
உனக்கும் சண்டை வரப்போகுது.|