Wednesday 11 April 2018

மொழியியல் விருதினைப் பெற்றுக்கொள்கின்றார் ஜெயராமசர்மா


 தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் அதியுயர் விருதான மொழியியல் விருதினை - அவுஸ்திரேலியா மெல்பேர்ணைச் சேர்ந்த மகாதேவாஐயர் ஜெயராமசர்மா அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.












சென்னை: தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின்  முன்னேற்றத்திற்கும் பாடுபட்டுவரும் தமிழ் அமைப்புகளுக்கும், கணினி யுகத்திற்கேற்ப, தமிழ் மொழியைக் கணினியில் அனைத்துத் தளங்களிலும்  பயன்படுத்தும் வகையில், தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ் வளர்ச்சித் துறையால் விருதுகள்  தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2017ம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு தமிழ் அமைப்பையும், மென்பொருள் நிறுவனத்தையும்  மற்றும் தகுதியான தமிழறிஞர்களையும் தேர்வு செய்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்றத்தில்இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து  விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்படும்என்று அறிவித்தார். அந்த  அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு அயலக தமிழர்களைத் தேர்வு செய்தும்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.முதல்வர் நாளை 5ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இவ்விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கவு உள்ளார்கள். தமிழ்த்தாய் விருது 2017-  பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூரு. கபிலர் விருது- கு.வெ. பாலசுப்பிரமணியன், .வே.சா விருது-. கிருட்டிணமூர்த்தி, கம்பர் விருது- சுகி.சிவம்சொல்லின் செல்வர் விருது- முனைவர் வைகைச் செல்வன், ஜி.யு.போப் விருது- கோ-ராஜேஸ்வரி கோதண்டம், உமறுப்புலவர் விருது-ஹாஜி  எம்.முகம்மது யூசுப், இளங்கோவடிகள் விருது- முனைவர் வெ. நல்லதம்பி, அம்மா இலக்கிய விருது-முனைவர் எம்.எஸ்.  இலட்சுமி, சிங்கப்பூர்முதலமைச்சர் கணினித்   தமிழ் விருது 2016-அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்    

மொழிபெயர்ப்பாளர் விருது 2017- நெல்லை சு.முத்து, வசந்தா சியாமளம், தி..தெய்வசிகாமணி(தெசிணி), முனைவர் இரா.கு.ஆல்துரை, .செல்வராசு  () குறிஞ்சிவேலன், பேராசிரியர் சி..சங்கரநாராயணன், முனைவர் ஆனைவாரி ஆனந்தன், ஆண்டாள் பிரியதர்சினி, மறவன் புலவு சச்சிதானந்தம்முனைவர் தர்லோசன் சிங் பேடி.உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 2016: இலக்கிய விருது 2016- நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர். இலக்கண விருது 2016- பெஞ்சமின் லெபோ, பிரான்சுமொழியியல் விருது 2016-முனைவர் சுபாஷினி, செருமானியம்.உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 2017: இலக்கிய விருது 2017-முனைவர் சந்திரிகா சுப்ரமணியன்ஆஸ்திரேலியா. இலக்கண விருது2017- முனைவர்  உல்ரிகே நிகோலஸ்செருமானியம். மொழியியல் விருது2017-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன் பத்திரிகை (04.04.2018)

No comments:

Post a Comment