Tuesday, 1 March 2022

`வளர் காதல் இன்பம்’ குறுநாவல் குறித்தான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் பார்வை

 

அன்பின் சுதாகர்


உங்கள் குறுநாவலை ரசித்துப் படித்தேன். அபாரமான பாத்திரப்படைப்பு.
விசாகன் - சிந்து இருவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை மிக லாவகமான நடையில் சொல்லிப் போனீர்கள். ஊரில் நடக்கும் ஒரு கதைக்கு ஆஸ்திரெலிய வண்ணம் பூசாமல் கதை இயல்பாகவே மெல்பேர்ணில் பொருந்தி வந்தது கதையின் சிறப்பு. சங்ககால கதைத்துளிகளை ஆங்காங்கே தூவிப் போனது இன்னுமொரு சிறப்பு.
பிரிந்து கூடும் காதலர்கள் எதிர்நோக்கிய சோதனைகளும் சவால்களும் கதைக்கு விறுவிறுப்பை சேர்த்தன.
ஈழத்து குடும்பங்களில் நிகழும் அன்றாட சம்பவக் கோர்வைகளில் கதை புனையப்பட்டிருப்பதால் கதாபாத்திரங்களுக்கிடையே வாசகன் தன்னை இணைத்துக் கொண்டே பயணிக்கிறான் - நானும் இவர்களுடன் ஒரு சகபயணியாய் பயணித்தேன்.

ஒரு சிறந்த கதையை படித்த திருப்தி.

கிறிஸ்டி நல்லரெத்தினம்