Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Monday, 1 June 2026

தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

 தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

பயிலரங்கு

குரு அரவிந்தன்.

15 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பங்கு பற்றலாம்.

10 வயதிற்கு உட்பட்ட பல தரப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ் பாடலாக இருக்க வேண்டும்.  பாடல்கள் தமிழ் சிறுவர்கள் மனனம் செய்யக் கூடியதாகவோ மனதில் பதியக் கூடியதாகவோ சிறிய பாடலாக அமையவேண்டும். பாடல்கள்:

1)         குழந்தை பற்றிய பாடல்

2)         குழந்தைகளுக்கான பாடல்

3)         தாலாட்டுப் பாடல் - இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து, அதற்கு ஏற்ப எழுதி அனுப்பவும்.

பாடல்கள் இலகுவான சிறிய சொற்களைக் கொண்ட பந்திகளில்

மொத்தம் 12 வரிகளில் அல்லது ஆகக்கூடியது 16 வரிகளில் இருக்க வேண்டும்.

இது சிறுவர்களுக்கான பாடல் என்பதால் அதற்கு மேல் வரிகள் உள்ள பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது பெரியவர்களுக்கான பாடல்கள் அல்ல, சிறுவர்கள் புரிந்து இலகுவில் பாடமாக்கக் கூடியதாக, மனதில் பதிக்கக் கூடியதாக அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.

பாடல்கள் மழலைகளுக்கு ஏற்றதாக, அவர்கள் பதிய சிறிய சொற்களை உள்வாங்கக் கூடியதாக ஒலி நயத்தோடு, இயற்கை சார்ந்ததாக அமைவது நல்லது. குறிப்பாக நிலம், நீர், வானம், மரம், செடி, நிறம், மிருகம், பறவை, எண், எழுத்து, கிழமை, மாதம், பருவகாலம், நட்பு, ஒற்றுமை, விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் அன்றாட செயற்பாடு போன்ற குழந்தைகளின் மனதில் பதியக்கூடிய இலகுவான அர்தமுள்ள பாடல்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பாலருக்கான இந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். எனவே இந்தப் பாடல் பயனுள்ளதாக இருந்தால்தான் அது மீண்டும் மீண்டும் அவர்களால் இசைக்கப்படும்.

குழந்தைகள் ஒரே நேரத்தில் குறைவான தகவல்களையே உள்வாங்கிக் கொள்வதால், எளிமையான வாக்கியங்களைச் சிறியதாகவும், சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் பாவியுங்கள். ஒரு பல்லவி, ஒரு சரணத்தை உடல் அசைவுக்கேற்ப இணைக்கலாம். சந்தத்திலும் கவனம் செலுத்துங்கள். சந்தம் என்பது சொற்கள் தாளத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறிக்கிறது.

உதாரணம்: ‘நாங்கள் பாடுவோம், நாங்கள் ஆடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்.’

குழந்தைகள் திரும்பச் சொல்லும் மற்றும் பெற்றோர்கள் ரசிக்கும், எளிதில் மனதில் பதியும், அன்பான பாடல்களை உருவாக்குங்கள். எளிய மொழி, அசைவுகளுக்கு ஏற்ற தாளங்கள் மற்றும் கற்றலை ஒரு விளையாட்டைப் போல உணரச் செய்யுங்கள். உதாரணமாக இந்த பாரதி பாடலைப் பாருங்கள்: குழந்தைகளைப் பற்றிய பாரதி பாடலில் நான்கு வரிகள்:

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 குழந்தைகளுக்கான குரு அரவிந்தனின் பாடலில் நான்கு வரிகள்:

எங்க வீட்டுத் தோட்டத்தில்

சின்னச் சின்னச் செடிகளில்

காலை நேரம் மலர்ந்திடும்

வண்ண வண்ணப் பூக்களாம்.

 குழந்தைகளுக்கான கமலவதனா சுந்தாவின் பாடலில் நான்கு வரிகள்:

பனிமழையே பெய்! பெய்! பெய்!

ஒவ்வொரு நாளும் பெய்! பெய்! பெய்!

பூப்பனிபோலப் பனியே பெய்! பெய்! பெய்!

பூம்பாறை செய்யப் பெய்! பெய்! பெய்!

 இதற்கான விதி முறைகள்:

சிறுவர் பாடல்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் தெரிவுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூலில் இடம் பெறும்.

பாடலாசிரியரின் முழுப் பெயர் மட்டும் புத்தகத்தில் பாடலுடன் இடம் பெறும். அதாவது, அவரது பெயரும் குடும்பப்பெயரும் மட்டும் இடம் பெறும். புனைப் பெயரோ அவரது பட்டங்களோ இடம் பெறமாட்டாது. மாணவர்களாயின் கல்வி நிலையத்தின் பெயரும் அவர்கள் விரும்பினால் இடம் பெறும்.

ஒருவர் ஒரு சிறுவர் பாடல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

அச்சுப்பிரதி தேவையானவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

பாஸ்போட் படம் அளவு உங்கள் படம் ஒன்று இணைக்கப்படவேண்டும்.

நூல் தொகுப்பாசிரியராக எழுத்தாளர், ஆசிரியர் குரு அரவிந்தன் பணியாற்றுவார். நூல் வெளியீட்டு உரிமை கிராமத்து வதனம் பெண்கள் அமைப்புக்கு உரியது.

நீங்கள் அனுப்பும் பாடல் உங்கள் சொந்தப் பாடல் என்பதையும், எங்கிருந்தும் பிரதி எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்து சேராத சிறுவர் பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பாடல்கள் எல்லாம் தெரிவு செய்தபின் நூல் வெளியிடும் திகதி பின்னால் அறிவிக்கப்படும்.

பாடல்களில் திருத்தங்கள் செய்யும் உரிமையும், முதலில் வெளியிடும் உரிமையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பிற்கே உரியது.

உலக சாதனை நூலில் உங்கள் பாடலும் இடம்பெற வாழ்த்துகள்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் பாடல்களையும், உறுதி மொழியையும் 2026 யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டிய

மின்னஞ்சல்: vathani.suntha@gmail.com

திருமதி கமலவதனா சுந்தா, நிறுவுனர்.

கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பு – கனடா.

தொடர்புகளுக்கு: 647-765-9761

Monday, 5 January 2026

சொல்லி வருவது பாதி - முன்னுரை

     



சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டியில் இந்த நாவல் தேர்வாகியிருக்கின்றது. இதுவே அச்சில் வெளிவரும் எனது முதல் நாவல். ஏற்கனவே மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு குறுநாவலும் அச்சில் வந்திருக்கின்றன.

`ஒற்றுமையே பலம்’ என்பது ஒரு பழங்கால நீதிக்கதை. அதில் வரும் குச்சிகள் போல இன்று நாம் எல்லாரும் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றோம். எத்தனையோ வருடங்கள் நாம் அடிமைப்பட்டிருந்தும், அதிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சிலர் பட்டுத்தெளிந்து கண் விழித்தாலும் செய்வதற்கு வழி தெரியாது திகைத்துக் கிடக்கின்றார்கள். நல்லது செய்வதைத் தடுப்பவரும் நம்மவரே. குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை உடைக்க முடியாதபடி வலிமையாக்குவது எப்போது?

இந்தக் கதை,1970/1995 காலப் போர்ச்சூழலில், இலங்கையின் வடபுறத்தேயுள்ள எல்லைக்கிராமமொன்றில் நிகழ்கின்றது. அரச அட்டூழியங்கள், இயக்கங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி இங்கே விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. நாவலின் நோக்கமும் அதுவல்ல. அதன் பின்னணியில் – கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, சில குடும்பங்களுக்கிடையேயான ஊடாட்டம், குறிப்பாக பெண்களின் கோபதாபங்கள் பிடிவாதம் சூழ்ச்சிகள் என்பவற்றை இணைத்து ஒரு திருமணத்தை சஸ்பென்ஸ் ஆக்கியிருக்கின்றேன். குண்டு வெடிப்பைவிட உறவினர்களிடையே நிகழும் குழப்பத்தின் தாக்குதலை நீங்கள் கடுமையாக உணரக்கூடும். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல், மணம் முடித்த தம்பதியினர் புலம்பெயர்ந்து செல்வதோடு முடிந்து விடுகின்றது. வருங்காலத்தில், அதன் நீட்சியாக புலம்பெயர்ந்த நாட்டை மையமாகக் கொண்டு இன்னொரு நாவலும் எழுதும் எண்ணமுண்டு.

நடுவராக இருந்து இந்த நாவலைத் தேர்வு செய்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா மற்றும் ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,

கே.எஸ்.சுதாகர்

(அவுஸ்திரேலியா)

kssutha@hotmail.com

https://shuruthy.blogspot.com/

Thursday, 1 January 2026

சொல்லில் வருவது பாதி - நாவல் - சென்னை புத்தகக் கண்காட்சியில்

 




சொல்லில் வருவது பாதி – நாவல்

இலங்கைப் போர்ச் சூழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது நாவல்.

இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.

பதற்றமே அன்றாட வாழக்கையாக மாறுபடும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.

இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.

வரலக்‌ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.

சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ், சுவாசம் வெளியீடு.

Tuesday, 4 November 2025

சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டி முடிவுகள் (2025)

 

போட்டி அறிவிப்பின்போது ஆறுதல் பரிசுகளாக 2,000 ரூபாய் அறிவித்திருந்தோம். அந்தத் தொகை இப்போது ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது.

அதேபோல் 3 நாவல்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் என்று அறிவித்திருந்தோம் இப்போது அது 5 நாவல்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்தப் புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும்.

இந்தப் போட்டிக்கு மொத்தம் 34 நாவல்கள் வந்தன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

மிக முக்கியமான நன்றியறிவித்தலை செய்ய வேண்டிய நேரம் இது.‌ கலந்துகொண்ட நாவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாவல்களைப் படித்துத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற நாவல்களை அறிவித்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே என் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் செய்த பணிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது. எங்களை அலைக்கழிக்க விடாமல், சொன்ன தேதியில் தன் பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்த அவருக்கு என்றென்றும் எங்கள் நன்றி உண்டு.

சுவாசம் பதிப்பகத்திற்கு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை அளித்த ராமச்சந்திரன் உஷா‌ அவர்களுக்கு நன்றி.

மற்ற விவரங்கள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.

முதல்‌ பரிசு:

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

பால கணேசன்

ரூ 50,000

-

2ம் பரிசு

ஆதினி

துரை.அறிவழகன்

ரூ 25,000

-

3ம் பரிசு

திரைகடலோடியும் புகலிடம் தேடு

வேலையா கார்த்திகேயன்

ரூ ‌10,000

-

ஆறுதல் பரிசுகள் - தலா 5000 ரூ

* சொல்லில் வருவது பாதி

கே.எஸ்.சுதாகர்


* உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்

ஷாந்தி பாலசுப்ரமணியன்

* குருதி ஓவியம்

சேரன் செக்குட்டுவன்

* மெய்யரசி

ஜெயந்தி கார்த்திக்

* பிரதி:வேலன்

முத்துச்செல்வன்

Thursday, 3 July 2025

அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப்போட்டி - 2025 முடிவுகள் (புகலிடம்)

 

சிறுகதைப் போட்டி - புகலிடம்

01. வேடம் தாங்கல் - கே.எஸ். சுதாகர் - அவுஸ்ரேலியா

02. அதிர்ஸ்டக்காரரா? - ஸ்ரீரஞ்சனி- கனடா

03. தங்கமலர் - நவமகன் - நோர்வே

04. பட்டுக்கிளி- டானியல் ஜெயந்தன் - பிரான்ஸ்

05. கவிதைகளும் கருங்குழிகளும் - பொ.கருணாகரமூர்த்தி - ஜேர்மனி

06. பனித்துகள் - பவானி - நெதர்லாந்து

07. மரணம் - கௌசி -ஜேர்மனி

08. தரமான சம்பவமொன்று- பிரான்சிஸ் அமலதாஸ் - பிரான்ஸ்

Monday, 28 April 2025

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி முடிவுகள் - 2025



குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3

2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:

இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா, இலங்கை.

இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா, தேனி, தமிழ்நாடு.

மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி. தமிழ்நாடு.

நான்காம் பரிசு: வரதராஜன் ஜூனியர்தேஜ் சீர்காழி, தமிழ்நாடு.

ஐந்தாம் பரிசு: (1) திவானி கந்தசாமி, வவுனியா, இலங்கை.

(2) சீ. கவிதாராணி, பாசறை, இலங்கை.

பாராட்டுப்பரிசுகள்: சிவநேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ. இலங்கை. எஸ். ராமேஸ்வரன், கொழும்பு -5. திருமதி பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை. பி.பி. புஸ்பராஜா, கொழும்பு -1. சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி. சிந்துஜா சிவகுமார், அவுஸ்ரேலியா. த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு. க.பூமணி, சென்னை, தமிழ்நாடு. இக்பால் அலி, பரகஹதெனியா, இலங்கை. விமலாதேவி புசுப்பநாதன், ரொறன்ரோ, கனடா. தீபரதி குபேந்திரன், வாணியம்பாடி, தமிழ்நாடு. பன்னீர்ச்செல்வம் கருப்பையா, கோலாலம்பூர், மலேசியா.

சுலோச்சனா அருண் (kurufanclub@gmail.com)

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

Monday, 23 December 2024

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி - 2025

 



அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.

15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.

இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.

மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.

நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.

ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.

10 பாராட்டுப்பரிசுகள் இலங்கை ரூபா தலா – 5000.

குரு அரவிந்தனின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவர்களாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாகவெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025

போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: : kurufanclub@gmail.com

இணையம்: : https://kurunovelstory.blogspot.com/, http://tamilaram.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். kurufanclub@gmail.com

Friday, 13 December 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டி -2024 முடிவுகள்

இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச் சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024.

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச் சிறுகதைப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப் போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

Sunday, 15 October 2023

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுப்பு அறிமுகம்


எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் எழுதிய 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நமது வவுனியா நகரசபைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலக்கிய விரும்பிகளை அன்போடு அழைக்கிறோம்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,எங்கே போகிறோம்,மெல்பேர்ண் வெதர்,கார்காலம்,ஏன் பெண்ணென்று,வளர் காதல் இன்பம் ஆகியன இவரது பிற நூல்களாகும். தொடர்ந்து இலக்கியங்களோடு செயற்பட்டுவரும் இவரது எழுத்துகளின் வாசனையை நுகர்ந்துகொள்ள நமது எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்.

புத்கங்களோடு இயங்குதலொன்றையே பெருங்கனவாகக்கொண்டு இயங்கிவரும் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஒன்பதாவது நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வுக்கு அனைவரும் வாருங்கள். திரையரங்கு செல்கையில் பிள்ளைகளை எவ்வாறு ஆர்வமாகவும் சந்தோசமாகவும் அழைத்துச் செல்கின்றீர்களோ அதுபோல இவ்வாறான நிகழ்வுகளுக்கும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.
சிந்திப்பவர்கள் சிறப்படைவார்கள். வாங்க மக்கா!

பண்டாரவன்னியன் புத்தகசாலை / 0772244616

Monday, 21 August 2023

இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி முடிவுகள்


இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது யாதெனில்..********************************************************************

என் தம்பியும் துபாயில் வசிக்கும் எழுத்தாளருமான தேவா சுப்பையா , தமது தகப்பனாரின் நினைவில் இராம செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை என்று தொடங்கி எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் ஒருங்கிணைப்பில் கடந்த வருடம் ஒரு சிறுகதை போட்டி நடத்தி 60,000 ரூபாய் பரிசு தந்தார். கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்தார்.விழாவும் நடந்தேறியது .அறிவீர்கள்.

இந்த ஆண்டும் இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி அறிவித்தோம். சரியாக..264 சிறுகதைகள் வந்து சேர்ந்தது. மூன்று நடுவர்களாக அனுபவம் மிக்க ..எழுத்தாளர் சுப்ரபாலன் அவர்களும் எழுத்தாளர் ரிஷபன் அவர்களும் எழுத்தாளர் கணேஷ்பாலா அவர்களும் பொறுப்பேற்று முதல் கட்ட தேர்வாக ஒவ்வொருவரும் பத்து கதைகளை தேர்வு செய்து தந்தனர்.

ஆக 30 கதைகளிலிருந்து அறிவித்தபடி பத்து கதைகளை தேர்வு செய்தோம் ஆனால் சில கதைகளை விட முடியாத படி அமைந்ததால் இன்னும் இருவர்க்கு பரிசு கொடுக்க தீர்மானித்தோம்

அதன் படி அமிர்தம் சூர்யாவாகிய நானும் அறக்கட்டளை நிறுவனர் தேவா சுப்பையாவும் சுவடு பதிப்பக நல்லு ஆர் லிங்கமும் 12 சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்தோம்.

12 எழுத்தாளர்களும் அவர்களின் சிறுகதை தலைப்புக்களும்
***********************************************************************
1-சேது – பெண்டுளம்
2-வானவன் - யப்பா
3-நெய்வேலி பாரதிகுமார்- 44
4-சாரா – பய
5-விஜி முருகநாதன் – முத்து பெரிப்பா
6-பிரபாதேவி – முள் முத்தம்
7-டேனியல் ராஜா –மூன்றாம் நாள் உயித்தெழும் விதை
8-கே.எஸ் சுதாகர் – வளரி
9-பாலஜோதி – அரிமாச்சி
10-சுப்ரா – காரண காரியங்கள்
11-லதானந்த் – கிரால்
12-இரா. சாரதி – பொது வழிச் சாலை

நல்லு ஆர் லிங்கம் தமது சுவடு பதிப்பகம் மூலம் சிறந்த முறையில் நூலாக அச்சிட்டு தருவார்.

தேவா சுப்பையா தமது அறக்கட்டளை ,மூலம் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் சிறந்த ஆளுமைகளை கொண்டு விழா நடத்தி வெளியிடுவார்.

அதில் வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பத்து நாள்களுக்குள் ஜி பே மூலம் பரிசு தொகை 5000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும்

இப்படிக்கு….
இராம செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைப்பாளர் ..அமிர்தம் சூர்யா

Friday, 7 October 2022

புதிய சிறுகதைத்தொகுப்பும், குறுநாவலும்

 



இந்தியாவில் பெற்றுக்கொள்ள 

www.zerodegreepublishing.com

zerodegreepublishing@gmail.com

+91 98400 65000


இலங்கையில் பெற்றுக்கொள்ள







அவுஸ்திரேலியாவில் பெற்றுக்கொள்ள

kssutha@hotmail.com