.png)
பண்டைய இராசாக்கள் காலங்களில் அரசவையில் தான் எல்லாமே நிகழ்ந்தேறும்
என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். அரசவையில் இருக்கும் பல அறிஞர்கள், புலவர்கள் – அதில்
ஆயிரம் குறைகள் சொல்வார்கள். அவை எல்லாம் சரி செய்யப்பட்ட பின்னரே ஓலைச்சுவடிகளில்
எழுதப்படும். அதன் பின்னரே மக்களை அவை சென்றடையும்.
இந்நாளில் புத்தகங்கள் வெளியாகி மக்களைச் சென்றடைந்த பின்னரே
அறிஞர்களை வந்தடைகின்றது. அவர்கள் அதன் குறை நிறைகளைச் சொன்னாலும் திருத்த முடியாது.
ஊடகங்களில் வரும் படைப்புகளை (சஞ்சிகை, பத்திரிகை, இணையம்) சிலர் வாசித்துவிட்டு தவறுகளைச் சுற்றிக்காட்டாமல் அப்படியே கடந்து போய்விடுகின்றார்கள். இன்னும் சிலரோ `புத்தகமாக வரட்டும்…. ஆளை ஒரு கை பார்க்கலாம் என்று காத்திருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment