ஆசிரியர் குறிப்பு:
இலங்கை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். பொறியியல் பட்டதாரி. 1983ல் இருந்து எழுதி வருகின்றார்.
சுதாகர் இந்த நாவலில் இதற்கு முந்தைய குறுநாவலான "வளர்காதல் இன்பம்"எனும் நூலிலிருந்து பல படிகள் முன்னுக்குச் சென்றிருக்கிறார்.
அரசியல் நிகழ்வுகள், போர், சாதி வேறுபாடு போன்ற பல விஷயங்கள் நாவலின் பின்னணியில் வந்த போதும் இது அடிப்படையில் ஒரு குடும்பக்கதை. ஸ்ரீதர் & ஆராதனா இருவரது குடும்பக்கதை. அத்துடன் இருபத்திரண்டு வருடங்கள் இலங்கையில் நடப்பதும் வருகின்றன.
போர் சூழ்ந்த நிலத்தில் மனிதர்களின் வாழ்வு எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல்களை விட, குடும்பத்தில் பெண்கள் ஏற்படுத்தும் குழப்பங்களில்
(துரையை விட்டுவிடக்கூடாது. வீட்டின் ஒவ்வொரு திருமணத்திற்கும் காசியாத்திரை போகிறவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வர வேண்டும்)
கதை அதிக கவனம் செலுத்துவதால் அவை அதிக தாக்கமில்லாது நகர்கின்றன. இது ஒரு நல்ல யுத்தி.
சிலதிருமணங்கள் இன்றும் பெண்களின் கருத்தைக் கேட்காது நடைபெறுவது உண்மை. ஒன்று பெற்றோர் பார்த்தால் சரியாக இருக்கும் என்று பெண்கள் நம்புவதும், அல்லது ஆராதனாவிற்கு நடந்தது போல் கண்ணைக்கட்டித் தள்ளிவிடுவதும் நடைமுறை யதார்த்தம்.
சுதாகர் இந்த நாவலில் உறவுச்சிக்கல்களுடன், சாவித்திரி இன்னொருவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளைத் திதி கொடுக்கச் சொல்வது போல ஏராளமான விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார். ஒரே அறையில் இடித்துக் கொண்டு உறங்கியவர்கள் வளர்ந்து, அந்நியர்களாக மாறுகிறார்கள். எதிர்பாராத மரணங்கள் வேர்களைப் பட்டுப் போக வைக்கின்றன. சுதாகர் இதன் இரண்டாம் பாகத்தை ஆஸ்திரேலியாவில் இருந்து தொடங்கக்கூடும்.
பிரதிக்கு:
சுவாசம் பதிப்பகம் 81480 66645
முதல்பதிப்பு டிசம்பர் 2025
விலை ரூ. 380
#நாவல்கள்
https://wp.me/pcj2AK-1fK

