Monday, 4 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 28 - நச்சுப் பாம்பாய் வருவேன்

போட்டிக்கோவில் நின்று எமது வளவுக்கும் பாடசாலைக்கும் இடையில் அமைந்த வீதியைப் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியால் பூரித்தது. சிவப்புக் கிறவல் வீதி மாயமாய் பறந்து மறைந்து விட்டது. ஆயிலடிக்கு இப்படி ஒரு இரட்டைப் பாதை கறுப்புக் காபட் வீதி வரும் என்று கற்பனையிலும் நான் எண்ணவில்லை.

'வணக்கம் அன்ரி. வீதியை ரசிக்கிறீர்களா?" கோமதி போட்டிக்கோ அருகாமையில் வந்தபடி விசாரித்தாள்.
‘ஓம். கற்பனைக்கும் எட்டாத அபிவிருத்தி."

சிந்துசா பேசினாள். 'அன்ரி, யுத்தம் வராதிருந்தால் காபட் வீதி இந்தக் காட்டுக்குள் எட்டிப் பார்த்திராது. துவேசம் புற்று வியாதியாய்ப் பிடித்த பெரும்பான்மை சிங்கள மக்கள் அரசு, இன்னும் பத்து நூற்றாண்டுகள் வந்துபோனாலும் காபட் லீதி போடாது. சீனாக்காரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்."
'சீனாக்காரன் வாழ்க!" பிள்ளைகள் ஏகோபித்த குரலில் வாழ்த்தினார்கள்.
●

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் பதிவு வேலைகள் முடிந்ததும் லெப்ரினன் ஐராங்கனி என்னை விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

இருநூறு அடிகள் வரை நீளமான மண்டபம். இருபக்கங்களிலும் சாக்குக் கட்டில்கள். அவற்றில் புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப் போராளிகள்.

Sunday, 3 May 2015

பாதுகை - சிறுகதை

'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..." கோவிலில் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டது. நேற்றுத்தான் ஒரு சோடி புதுச்செருப்பு வாங்கியிருந்தேன். நங்கூரம் படம் போட்டது. அதைப் போட்டுக்கொண்டு மடைக்குப் போய் ஒரு 'ஷோக்' காட்டவேணும். போனமுறை மடைக்கு வரேக்கை உமாசுதன் புதுச்செருப்புப் போட்டுக் கொண்டு வந்தவன். அவனை ஒருத்தரும் கண்டுகொள்ளேல்லை. மண்ணை உதறிக் கொட்டுமாப்போல, பத்துப் பதினைஞ்சுதரம் நிலத்தோடை செருப்பைத் தாளம் போட்டு, அடிச்சு அடிச்சுக் காட்டினவன். இந்த முறை நானும் போட்டுக் காட்ட வேணும்.

கோவிலிலை செருப்பைச் சும்மா கழட்டி வைக்கப்படாது. ஆராவது அடிச்சுக் கொண்டு போடுவான்கள். செருப்புக்கு காவல் இருக்கிறவரிட்டைக் காசைக் குடுத்து கவனமாக வைக்க வேணும். செருப்புக் கொஞ்சம் பெரிசாப் போச்சுதோ? எனக்கு ஆறாம் நம்பர்தான் சரிவரும் போல. பரவாயில்லை! ஆர் உதைக் கவனிக்கிறான்கள்.

Friday, 1 May 2015

தொண்ணூற்றி மூன்று வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம்

சிசு.நாகேந்திரன்

ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பிருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர், காற்று. படுக்கையில் 'சும்மா' சரிந்தவாறே குளிர் போர்வையைப் போர்த்திவிட்டு கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.

"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம் இல்லையா" என்று கேட்டேன்.

"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."

கங்காருப் பாய்ச்சல்கள் (-16)

புதுமை(புரட்சி)ப் புத்தகங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களை அந்தப் பெண் எழுத்தாளர் வெளியிட்டிருந்தார். சிறுவர் கதம்பம், சுடர், தமிழன் வேட்கை, கீர்த்தனை மாலை, சந்தகக்கவி என்ற புத்தகங்கள் அவை. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியையும் கூட. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம்தான். ஆனால் ஒரு குறை.

புத்தகம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? உள்ளே சரக்கு இருக்குதோ இல்லையோ அதற்கு ஒரு வடிவம் வரையறை இருக்க வேண்டும். 'மணி' அடித்தால் ஓசை வரவேண்டும் அல்லவா?