Sunday, 28 February 2016

நரகத்திற்கு


 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 12
 சிவநாயகத்திற்கு அவுஸ்திரேலியாவில் பல பிள்ளைகள் இருந்தார்கள். இருப்பினும் கடைசி மகன் தினேசுடன்தான் அவருக்குக் கூடுதல் ஒட்டுதல்.

தந்தையர் தினம் வந்தது. தினேஸ் அவரை சினிமாவுக்கு  ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். இரவு உணவு முடிந்து திரும்புகையில் அவருக்கு குளிருடுப்பு, சப்பாத்து, ‘சிவாஸ் றீகல்’ வாங்கிக் குடுத்தான்.

போத்தல் உள்ளே இறங்க, நாதம் பிறந்தது.

 “இதைப் போல ஒவ்வொரு வருஷமும் நீ செய்யாட்டில் நரகத்துக்குத்தான் போவாய்” என்றார் அவர்.

Thursday, 25 February 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION





by

Kathir Bala Sundaram


Chapter 2

Reign of Mockery


Vice Principal Priya appeared cheerful enough as she led the Smiling Minister into the large auditorium. As soon as the Minister entered, the students stood and began clapping enthusiastically. It became a constant drone as the Minister and his five Tamil soldiers climbed onto the three foot high platform and sat down in their respective seats. Large yellow and black striped curtains covered the entire rear section of the platform depicting the school colors.

Principal Vasantha joined the rest of her colleagues at the back of the auditorium, her wide smile revealed her ignorance of the chaos about to descend upon her.

Friday, 19 February 2016

தந்திரம்


 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 11

அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன். காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.

அன்றும் அப்படித்தான்.

மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.

தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான். மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் கொடுக்கின்றேன் என்றேன்.


மெதுவாக நழுவி விலகினான்.

Thursday, 18 February 2016

நான் ஓர் அகதி



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 10

அவுஸ்திரேலியாவிற்கு நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், மில்லியனர்.

ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான் என்றான்.

வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான். அற விலைக்கு வீட்டை அவனே விற்று தன் பணத்தை எடுத்தான்.


மீண்டும் வாடகை வீட்டில் நான்.