மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு
போவான். விரிவுரைகள் இல்லாத புதன்,
வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும்.
பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு
கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே
சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார்.
நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும்
பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப்
பக்கத்தில் ஒரு குட்டி மேசையும்,
இவனுக்கான கதிரையும் இருக்கும்.
மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச்
சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும்,
அன்றைய புதினப்பத்திரிகையும்
வாசிப்புக்காக இருக்கும்.
Wednesday, 7 September 2016
Saturday, 3 September 2016
பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்
யூனியன் கல்லூரி
நினைவுகள் பதிவுகள்
5. ஆட்டுத் தீர்த்தமும் கிணற்று நீரும்
பௌதிகச்
சூழல் சம்பந்தமான மூன்றாவது பிரச்சினை நாலுகால் விலங்குகளின் பிரச்சினையாக
இருந்தது. வளாகத்தின் வடபகுதி வேலியூடாக அயலட்டையில் உள்ள ஆடுகள் யாவும் இரவில்
வந்துவிடும். ஒரு இருபத்தைந்து முப்பது பார்க்கலாம். அவை இரவில் உறங்குமிடம்
விஞ்ஞான ஆய்வுகூட விறாந்தை, அதன் வடக்கே உள்ள உயர்தர வகுப்பு வகுப்பறைகள். அவை
கொட்டிய கறுப்புப் பிளுக்கைகள் விறாந்தை நீளத்துக்கும் வகுப்பறைகளிலும் பரந்து
காணப்படும். அந்தப் பக்கம் கால் வைத்தால் ஆட்டுத் தீர்த்த வாசனை ஆசிரியர்களையும்
மாணவர்களையும் வரவேற்றது. சில குளப்படியான ஆடுகள் ஆசிரியர் மேசையிலேயே ஏறித்
துயின்றது போதாதென்று, தீர்த்தம் தெளித்திருக்கும். மீன் கூடைக்காரிக்கு மீன்வாசம்
என்ன தோசமா? அவர்களும் பழக்க தோசத்திற்கு ஆளாகியிந்தார்களோ? தோட்ட வேலைக்குப்
பொறுப்பான திரு. கதிரனின் முதல் வேலை அவற்றைச் சுத்தம் செய்வதே. வகுப்புகளுக்கு
மாணவர்கள் வரமுன்னர் செய்து முடிக்க வேண்டும். திரு. கதிரனைச் சிலவேளைகளில்
காலையில் பாடசாலை அடைந்ததும் காண முடிவதில்லை. சற்று பிந்தி வந்ததை விசாரித்தால்,
Thursday, 1 September 2016
புறமோஷன்
50 வார்த்தைகளுக்குள்
ஒரு குறும் கதை
கோகுலனும் தீபனும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக ஒரே
பாடசாலையில் பிறைமரியில் சேர்ந்தார்கள்.
சேர்ந்த சிறிது காலத்தில் கோகுலன் உட்பட
நான்கு மாணவர்கள் வகுப்பேற்றப்பட்டார்கள்.
தீபனின் அம்மா, தனது மகனையும் வகுப்பேற்றும்படி ஆசிரியரிடம்
கெஞ்சினார்.
“நன்றாகப் படிக்கக் கூடியவர்களை மாத்திரம் வகுப்பேற்றினோம்” ஆசிரியர்
மறுத்துவிட்டார்.
”இருவரும்
ஒன்றாக வளர்ந்தவர்கள். தயவு செய்து தீபனையும் வகுப்பேற்றுங்கள், இல்லாவிட்டால்
கோகுலனை வகுப்பு இறக்கி விடுங்கள்”
ஆசிரியர் திகைத்துப் போனார்.
கங்காருப் பாய்ச்சல்கள் (16)
மெளனம் கலைகிறது (1)
Subscribe to:
Posts (Atom)



