ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.
“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”
சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள்
நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும்
கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.
“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு
இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான்
கணவன் குமரேசன்.
பிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப
மாட்டார்கள்.






