கோவில்
நிர்வாகத்தினரிடம் ஏற்படும் உள் சச்சரவுகளால் பக்தர்கள் மாத்திரமன்றி
சுவாமிகளுக்கும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. மெல்பேர்ணில் நான்கு கோவில்கள்
பிரசித்தம் வாய்ந்தவை. சிவா- விஷ்ணு, பிள்ளையார், இரண்டு
முருகன் கோவில்கள். இந்த இரண்டு முருகன் கோவில்களும் மெல்பேர்ணில் மேற்குப்
புறத்தே அமைந்துள்ளன. ஒரு கோவில் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்பு
கட்டப்பட்டது. மற்றது ஒன்றிலிருந்து பிரிந்து உருவானது.
ஒருமுறை சுவாமி
தரிசனத்திற்காக கோவிலிற்குச் சென்றிருந்தோம். பூசை முடிந்து தேவாரம், திருவாசகம் பாடிக் கொண்டிருந்தார்கள். கடும்
குளிர். குழந்தை அழுதது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டிற்குப்
புறப்படுவதற்குத் தயாரானோம். பிரசாதம் வாங்க முடியவில்லை. அப்போது ஒரு குரல்
கணீரென்று ஒலித்தது. 'மெல்பேர்ண் முருகனுக்கு அரோகரா'. அதைத் தொடர்ந்து மெல்பேர்ணில் கோயில்
கொண்டிருக்கும் இடங்களின் பெயர்களை முதலிலும், சுவாமிகளின் பெயரை பின்னரும் சொல்லி 'அரோகரா'.
புதிய கோவிலிற்கு
அரோகரா இல்லை, சுவாமிக்கும்
இல்லை. இனி என்னால் இப்படித்தான் சொல்ல முடியும்.
"A முருகனுக்கு
அரோகரா ; B பிள்ளையாருக்கு அரோகரா
; C சிவா - விஷ்ணுவிற்கு அரோகரா.
No comments:
Post a Comment