Friday, 25 March 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION


Chapter 4

Report to Kilinochchi

The Smiling Minister continued to stare at the crowd, and his smallish eyes narrowed in dangerous contemplation and his hand stroked his thick black mustache—a near perfect duplicate of His Royal Highness’ mustache. He needed to stall for time, to divert the students’ attention and anger.

So he decided to recite the Tamil Tiger’s battlefield achievements. Their victories over the years were the main reason for the mass support by the native Tamil population and the Tamil Diasporas. Maybe if he could remind these students of the Tamil Tiger’s past victories, they would settle down and possibly even fall in line. Some of the more well known victories had been used as propaganda to collect money from the Diaspora. He stroked his black mustache again. Which battle should he relate? Before he did so, he decided to bait the students.

Tuesday, 22 March 2016

அறிவுரை இலவசம்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 15

கணேசராசா  ஒரு சிகரெட் பிரியன். தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பான். யாராலும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது.

ஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பனடோல் எடுத்தேன்.

“பனடோல் உடம்புக்குக் கூடாது. தொடர்ந்து குடித்தால் உடம்பு அதற்கு இசைவாக்கம் அடைந்துவிடும். பிறகு ஒரு நாளும் காய்ச்சலுக்கு பனடோல் வேலை செய்யாது” சிகரெட் புகையை இளுத்து இளுத்து வளையம் விட்டபடியே உபதேசம் செய்தான் கணேசராசா.



Tuesday, 15 March 2016

கார் விபத்திற்கு ஒரு அரிச்சனை


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 14

குகநாதன் குடும்பம் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. காரிற்கு பலத்த சேதம். ஆக்களுக்கு ஒன்றும் இல்லை.

கோயில் ஐயருக்கு ரெலிபோன் செய்தி பறந்தது.

“ஐயா! யமன் வந்து எட்டிப் பாத்திட்டுப் போயிருக்கிறார். உடனை ஒரு அருச்சனை செய்து விடுங்கோ. பிறகு சந்திக்கேக்கை காசைத் தாறம். காரின்ரை நம்பரைச் சொல்லிறன். எழுதுங்கோ”

“அந்த நம்பர் வேண்டாம் பிள்ளை. குடும்பம் எண்டு பொதுவாச் செய்யிறன். நீர் கிறடிற் காட் நம்பரைச் சொல்லும்”




Sunday, 13 March 2016

ததிங்கிணதோம் - சிறுகதை


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

Thursday, 10 March 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

by
Kathir Bala Sundaram

Chapter 3
Hit and Run

Grasping Pandit Manka’s hand in terror, Principal Vasantha gasped uncontrollably. The rest of the teaching staff stood like statutes, spell bound by the bleating students. Hardly one of them could believe that the students would be so rude to refuse the Smiling Minister’s invitation to participate in the ‘Condemnation Procession’ and to carry the larger than life pictures of His Royal Highness.
“Piriya, I don’t understand,” Vasnatha cried to her Vice Principal. “Why are the students bleating like this?”
“Madam, it’s because of the Tamil Tiger’s ruthless totalitarian rule. They’ve violated so many human rights that this is the result. Even their own community hates and curses them.” She turned to regard her superior, trying to get her to understand. “They have cells in every town and village and they keep records of taxes each individual pays. Madam, their tax system is killing our people and the students too, suffer under its heavy burden. They hate the Tamil Tigers.” The Vice Principal looked back at the outraged Minister. “It will be their death, eventually.”

Tuesday, 8 March 2016

மாமாவும் மருமகளும்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 13

குகனும் பவானும் காசிநாதனின் பிள்ளைகள். குகன் மனைவி துளசி.

காசிநாதன் மருமகள் துளசியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாமே அவள்தான்.

”பவானுக்கு சீக்கிரம் கலியாணம் சரிவர வேண்டும்” பவானின் திருமணம் நெடுநாட்களாகத் தடைபட்ட கவலை காசிநாதனுக்கு.

“மாமா, உங்கடை தங்கைச்சியைக் கேட்டா ஏதாவது ஒழுங்கு செய்து தருவாவல்லே!”

“குகனைக் கிணத்திலை தள்ளி விழுத்தின மாதிரி, பவானையும் நாசமாக்கிப் போடுவாள் அவள்.”

துளசி திகைத்துப் போனாள்.


Sunday, 6 March 2016

எஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்


அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய
எஸ். பொ. நினைவுச் சிறுகதைப்
போட்டி முடிவுகள்
 ===============================

முதற்பரிசு பெறும் கதை
இவர்களும் எந்தன்      
எஸ்.ஐ.நாகூர் கனி,
24/15, பேரா வீதி,
வாழைத்தோட்டம், கொழும்பு 12. இலங்கை

Thursday, 3 March 2016

படம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)



வேலை செய்யுமிடத்தில் நேற்று மதிய இடைவேளையின்போது, ஒரு வியட்நாமியரை---எனது முகநூல் நண்பரை--- ரொயிலற்-பாத்றூமிற்குள் சந்தித்தேன்.

அவர் சிறுநீர் கழித்துக் கொண்டு நின்றார். அவரின் ஒரு கை ‘அங்கேயும்’ மறுகை ஐ-போனிலும் இருந்தது. ஐ-போனில் அவர் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார்.

”முதலிலை ஒரு விஷயத்தை முடி” என்று கத்தினேன்.

அவன் “ஐ லைக்’ என்றான்.

இதை நான் எனது இன்னொரு நண்பருக்குக் கூறியபோது,

“அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சும்மா படம் காட்டுறான்” என்றார். தொடர்ந்து,
“when he eat crab - up, when he eat fish – up, when he eat banana – up, when he go toilet - up“

அவர் up, up என்று சொன்னது, ஒவ்வொரு தடவையும் படங்களை upload செய்கின்றார் என்பதை.

Tuesday, 1 March 2016

பேர்த்திகள் இருவர் – சிறுகதை

செங்கை ஆழியான் (க.குணராசா)

வாங்கில் படுத்திருந்த ஏகாம்பரத்தார் கண் விழித்தபோது கால்மாட்டில் காயத்திரி அமர்ந்திருந்தாள். இன்று மட்டும் தான் வாங்கில் உறங்கப் போகிறார். நாளை எத்தரையிலோ? இடம் பெயரப் போகிறார்கள். அந்த நேரம் பார்த்து காயத்திரி வந்திருக்கிறாள். காயத்திரி அவரின் மூத்தமகனின் இரண்டாவது மகள். தானாக விரும்பி இயக்கத்தில் சேர்ந்தாள். அவளைத் திரும்பி அழைத்துவர அவர் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. அவள் வர மறுத்துவிட்டாள்.

“காயத்திரி எப்ப வந்தாய்? கன நேரமா?” என்றபடி வாங்கைவிட்டு எழும்ப முயன்றார். காயத்திரி தடுத்தாள்.

“நீங்க படுங்க அப்பப்பா. நானிருக்கிறன். உங்களை எல்லாம் ஒருக்கா பார்த்துவிட்டுப் போக வந்தன்.”

ஏகாம்பரத்தார் போர்வையை நீக்கிவிட்டு டக்கென்று எழுந்திருந்தார். அவள் வந்ததன் நோக்கம் புரிந்தது. ஏழாண்டுகளின் பின்னர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவர் அவளை ஆழமாகப் பார்த்தார். அப்பார்வையின் காங்கையை அவளால் தாங்க முடியவில்லை. கிழவனுக்குப் புரிந்துவிட்டது.