அதிர்ச்சி தரும் மின்னஞ்சல்கள்
ஒரு சங்கத்தின் செயற்குழுக்கூட்ட அறிக்கையை, சங்கத்தில்
முடிவெடுக்காமல் வேறு ஒருவருக்கும் அனுப்புதல் கூடாது. முன்னர் மெல்பேர்ணில் ஒரு
எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு சம்பந்தமான மின்னஞ்சலை, செயற்குழு உறுப்பினர்
அல்லாத ஒருவருக்கும் அனுப்பியிருந்தார். ஒருவேளை செயற்குழுவில் அவர் சம்பந்தமாகக்
கதைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு அனுப்பக்கூடாது என்பதே முறையாகும்.
பிறிதொருநாள் ஒரு எழுத்தாளர் இறந்த விடயத்தை அவர்
மின்னஞ்சல்மூலம் பலருக்கும் தெரிவித்திருந்தார். இறந்தவரின் புகைப்படம், இரங்கல்
செய்தி, ஈமைக்கிரியை நடைபெறும் இடம் நேரம் முதலிய விபரங்கள் அதில் இருந்தன. ஆனால்
அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால்,
இறந்தவருக்கும் அந்த மின்னஞ்சல்
அனுப்பப்பட்டிருந்ததுதான். ஆவிகள் மின்னஞ்சல் பார்ப்பதில்லை என்றாலும் எங்களுக்கு
பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது.
இந்தக் cut & paste வந்தபிறகுதான் – கவிதைக்கு
நாசம், சிறுகதைக்கு நாசம் இப்ப மின்னஞ்சலுக்கும் நாசம்.
அருமையான பகிர்வு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html