அவுஸ்திரேலியாவில்
இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி
அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று
நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது
விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும்,
எழுதும் எவரும் இப்போட்டியில்
பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3. சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode)
எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில்
அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல்
’அமரர் அருண்.விஜயராணி நினைவுச் சிறுகதைப் போட்டி-
2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின்
தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி
இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல்
வேண்டும்.
4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல்
வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு
போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல்
கூடாது.
5. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு
நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே
இறுதியானது.
இப்போட்டிகளுக்கான
பரிசு விபரங்கள் பின்வருமாறு:
முதலாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய
வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய
வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 150 அவுஸ்திரேலிய
வெள்ளிகள்
சிறப்புப் பரிசு - தேர்வு
பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.
முடிவுத்திகதி:
31.10.2016
இத்திகதிக்கு
முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள்
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 மார்கழி மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- real24news@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு:
www.akkinikkunchu.com இணையத்தினைப்
பார்க்கவும்.
No comments:
Post a Comment