Tuesday 7 November 2017

மாபெரும் இலக்கியச் சந்திப்பு - கங்காருப் பாய்ச்சல் (26)



இடம் : வேர்மொன்ற் சவுத், மெல்பேர்ண்

காலம் : எங்கள் புத்தகங்கள் வெளிவந்தவுடன்

மங்கல விளக்கேற்றல் : அ, ஆ, இ, திருமதி அ

அமர்வு 1 – வாசிப்பு அனுபவப் பகிர்வு
தலைமை ஆ

பத்திரிகையாளர் ’அ’ எழுதிய ‘மழை’ சிறுகதைத்தொகுப்பை இ புகழ்ந்துரைப்பார். இதன் அணிந்துரையை திரு. ஆ எழுதியுள்ளார்.

திரு ஆ எழுதிய ‘பலாக்கொட்டை’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பை பத்திரிகையாளர் ‘அ’ முதுகு சொறிவார்.

வைத்தியர் ‘இ’ எழுதிய ‘ஆதாமும் ஏவாளும்’ சிறுகதைத் தொகுப்பை பொறியியலாளர் ‘ஈ’ என்று பல்லிளிப்பார்.
இந்த ஒழுங்கு சிலவேளைகளில் மாறலாம் என்பதை முன்கூடியே அறியத் தருகின்றோம்.

கவிதை இவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்பதால் கவிதைத்தொகுப்பு இங்கு இடம் பெறவில்லை.

அமர்வு 2 – பட்டிமன்றம்
விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது மகிந்தா அரசா அல்லது நாங்களா?

நாங்களே என உணவருந்தியபடி பேசுபவர்கள் (இவர்களுக்கு அல்சர் வருத்தம் இருப்பதால் உணவருந்திக் கொண்டு உரையாற்றுவதை மன்னித்துக் கொள்ளுங்கள்) :பத்திரிகையாளர் ‘அ’, வைத்தியர் ‘இ’

மகிந்தா பக்கம் பக்கம் : திரு ஆ, திருமதி ‘அ’

விழா முடிவில் ‘கோ மணம்’ ஆவணப்படம் திரையிடப்படும்.

கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நீங்கள் வராவிட்டால், இந்த ’மாபெரும் இலக்கியச் சந்திப்பின்’ பார்வையாளர்களும் பங்காளர்களும் நாங்கள்தான் என பெருமையுடன் பீற்றிக் கொள்கின்றோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: அ, ஆ, இ








No comments:

Post a Comment