Wednesday, 7 February 2024

வெந்து தணிந்தது காடு

 





3 comments:

  1. பா.செயப்பிரகாசம்1 March 2021 at 13:37

    அன்புள்ள நண்பருக்கு பிப்ரவரி கணையாழி இதழில் 'கோரானா 'பற்றிய அற்புதமான கதை வாசித்தேன் .தன்னனுபவம் இல்லாமல் இவ்வாறு நேர்த்தியான சிறப்பான ஒரு படைப்பை தர இயலாது .தாங்கள் ஒரு மருத்துவரா? இல்லை எனினும் நோயாளியாக இருந்த அனுபவம் அவ்வாறு தீட்டுவதற்கான திரைச்சீலையை விரித்திருக்கக்கூடும். அல்லது திறன்மிகு ஒரு கலைஞன் புறஅனுபவங்களை தொகுத்து எழுதவும் சாத்தியப்படும்.குடும்பம் மருத்துவமனை ஒலிவர் வார்டு எலசபெத் தாங்கள் என ஒரு நேர்த்தியான சித்திரங்களை வரைந்திருக்கிறீர்கள். படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள் !வேறு சிறுகதைகள் அல்லது தொகுதிகள் தமிழில் வெளியாகி இருக்கின்றதா? நன்றியுடன் பா. செயப்பிரகாசம் எழுத்தாளர்.

    ReplyDelete
  2. பரா சுந்தா1 March 2021 at 13:43

    வைத்தியர்களின் வாழ்க்கையும் சவால்களும் தியாகமும் மிகவும் யதார்த்தமான பார்வை
    அக்கினியோடு விளையாடும் வாழ்வு -கண்ணுக்குத் தெரியாத அக்கினி !
    மனிதரின் கவனக்குறைவு -இனத்தையே அழிக்கிறது
    அருமையான பார்வை !

    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு - தழல்
    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

    ReplyDelete
  3. முகநூலில் வந்த சில கருத்துகள் :

    காலத்திற்கு இயைந்த கதை. அக்ஷ்ராவின் புனைவு உண்மையாகி விடக்கூடாது. எனினும் நம்பிக்கைகள் அனைத்தும்
    'மங்கலாக பனிப்புகாருக்குள் தெரியும்' காட்சிகளாகவே உள்ளன. இதுவும் கடந்து போக வேண்டும். / Selvaranjani Subraminiam

    ஆரம்பம் வாசித்தது போன்றிருந்தது. எப்போதோ தேடிய மிகுதிக் கதை கிட்டியிருப்பது பின்னர் புரிந்தது. இந்த நேரத்திற்கு ஏற்ற கதை.கொரனா பற்றிய பல அறியவேண்டிய தகவல்களை கதையோடு இலாவகமாக வாசகரின் மூளைகளில் பதிய வைத்துள்ளீர்கள். பாராட்டுகள். / Jogeswari Sivapragasam
    இக்காலச்சூழலை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். மருத்துவர்களின் பணியின் மேன்மை தங்கள் வார்த்தைகளால் பல மடங்கு உயர்வடைகிறது. பாராட்டுக்கள். / Rathidevi Kandasamy

    15.05.2021


    ReplyDelete