Tuesday, 28 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (11/14)

 

அதிகாரம் 11 - தீராவெறி

விடுமுறை முடித்து எல்லாரும் வேலைக்குத் திரும்பினார்கள்.

அதன் பிறகு ஒருநாள் நட்டாஷா வேலையை றிசைன் பண்ணிவிட்டுப் போய்விட்டாள். போகும்போது எல்லாரிடமும் வந்து கதைத்துவிட்டுப் போனாள்.

“நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நந்தனிடம் சொன்னாள்.

அவள் அப்பாலே போனதும்,

“நட்டாஷாவின் வயிற்றைப் பார்த்தாயா நந்தன்? வீங்கி இருக்கின்றது. உள்ளே குட்டி எட்றியான் இருக்கின்றான்” என்றான் ரான்.

Friday, 24 March 2023

விளக்கின் இருள் - சிறுகதை

ஒலி வடிவில் கேட்க படத்தை `க்ளிக்’ செய்யுங்கள்

பகுதி 1


பகுதி 2 



குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா

Monday, 20 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (10/14)

 

அதிகாரம் 10 : புதிய தலையிடி

விடுமுறை முடிந்து வேலை தொடங்கியதும் புங், ஜோசுவாவை மெது மெதுவாக வெட்டத் தொடங்கினாள்.


ஜோசுவாவுக்கோ அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றுவது என்பது முடியவே முடியாத காரியம். அவளின் மோகனக் கவர்ச்சியில் சிக்குண்டு தவித்தான். அவள் இன்னமும் வருவாள், இன்பத்தை அள்ளிப் பருகலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும்போது, அவள் தான் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள்.

புங் இப்போது நந்தனை தனது உற்ற நண்பனாக பாவனை செய்து கொண்டாள். உண்மையில் ஜோசுவாவைக் கோபப்படுத்துவதற்காகவே அவள் இந்த நெருக்கத்தை நந்தனுடன் ஏற்படுத்திக் கொண்டாள்.

ஜோசுவாவை கொடுமையான தனிமை வாட்டியது.

அவள் இனித் தனக்குக் கிடைக்கமாட்டாள் எனத் தெரிந்துகொண்டதும், அவளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களில் சிலவற்றை ஃபேஸ்புக் மூலம் தனது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான் ஜோசுவா. இவை அமீபாக் கலங்கள் போல் பிரிந்து பிரிந்து பலரிடம் சென்றன.

Tuesday, 14 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (9/14)

 

அதிகாரம் 9 : கண் மண் தெரியா நட்பு

கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை நந்தனுடன் பகிர்ந்து கொள்ளும் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.

“என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.”

“நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட முன்னூற்றி இருபது டொலர்கள்.”

அவள் தொடர்ந்தும் நந்தனின் நண்பியாக, தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பாள்.

இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாதுஎன்றாள் புங். நந்தனுக்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

Friday, 10 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (8/14)

 
அதிகாரம் 8 : கொண்டாட்டம்

மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

Monday, 6 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (7/14)

 

அதிகாரம் 7 : பின் தொடருதல்

தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபது நாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள் தாம் கதைப்பார்கள்.

Wednesday, 1 March 2023

பாம்பும் ஏணியும் - சிறுகதை

 ஒலி வடிவில் கேட்க படத்தை `க்ளிக்’ செய்யுங்கள்


குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா


ஓவியம் : ஸ்ரீரசா