Showing posts with label புனைவிலக்கியக் கட்டுரை. Show all posts
Showing posts with label புனைவிலக்கியக் கட்டுரை. Show all posts
Tuesday, 14 January 2025
Wednesday, 16 July 2014
வரலாற்றுத் தடங்கள்
நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச்
சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம்
அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.
அது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.
●
அன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த
இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார்.
அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில்
இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.
சீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள்
அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற்
வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த
அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை
தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த
இடத்தில் ஒரு பெரிய குகை இருந்ததாகவும்
அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார்.
அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த
அண்ணன் ஆனந்தன்.
மறுநாள் காலை சைக்கிள் கீரிமலையை நோக்கி விரைந்தது. நான்
கரியரில் குரங்குக்குட்டிபோல தொங்கிக் கொண்டேன்.
Saturday, 19 April 2014
உச்சம் (கங்காரு)
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி
- கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள்
ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும்.
பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள்
அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.
"கங்காரு வருத்தம் வந்து இறந்திருக்க வேண்டும்" என்றேன்.
"இல்லை.. இல்லை... எந்தவொரு விலங்கும் வருத்தம் வந்தால், வீதியில் வந்து இறந்து விடுவதில்லை. எங்காவது பற்றைகள் மரங்கள் உள்ள மறைவிடங்களைத்தான் அவை தேடிப் போகும். யாரோ இதை வாகனத்தினால் அடித்து விட்டார்கள்" என்றான் மகன்.
திடீரென்று காரை நிறுத்துங்கள் என்றான் மகன்.
Subscribe to:
Posts (Atom)


