Monday, 25 January 2016

அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை


அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.

ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.

மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.

“உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.

Wednesday, 20 January 2016

பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார் - சிறுகதை



பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

Friday, 15 January 2016

பித்தளைத்தகடு - குறும் கதை



இருபது வருட காலமாக இருந்துவந்த உயர் பாதுகாப்பு வலயம்’  நீக்கப்பட்டது. மக்கள் ஊருக்குச் சென்று காணி பூமிகளைத் துப்பரவாக்கினார்கள். வீடுகளைத் திருத்திக் கட்டினார்கள்.

வீரபத்திரர் கோவில் அரசமரமும் மணிக்கோபுரமும் ஷெல் அடியினால் சேதமடைந்து இருந்தது. கோவில் கட்டடத்திற்கு  எந்தவித பாதகமும் இல்லை. இருந்தும் கோவில் விக்கிரகங்கள் களவு போய்விட்டன. ஆமிக்காம் அருகில் இருந்தபடியால் அவர்கள் கோவில் கிணற்றைப் பாவித்திருக்க வேண்டும். கிணற்றுநீர் சுத்தமாக இருந்தது.
இந்த வருடம் சித்திரா பெளர்ணமிக்குப் போகவேண்டுமென சுபாஷ் நினைத்திருந்தான். அவனுக்கு நன்றாக நினைவிருந்தது, இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு சித்திரை மாதத்தில்தான் எல்லோருமே ஊரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Monday, 11 January 2016

கதை கதையாம் காரணமாம்! - சிறுகதை



 ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி ஆறு.
முதலாவது நாள்

            “பாக்கியம், பாக்கியம். பிள்ளைக்கு ஒரு ரீச்சிங் றெயினிங் கண்டியிலை இருக்காம். தம்பியும் நாளைக்குப் போறானாம் எண்டு கேள்விப்பட்டன். ஒருக்கால் கூட்டிக் கொண்டு போய்ச் சிற்றம்பலம் வீட்டை விட்டிட்டான் எண்டால், அவள் மிச்சம் எல்லாத்தையும் வெண்டு விடுவாள்.”

            “போறதெண்டுதான் சொல்லிக் கொண்டு நிக்கிறான். உந்தக் கோதாரிப் படிப்பை விடெண்டாலும் விடுகிறானில்லை. உந்தப் பிரச்சினையளைத் துளைச்சுக் கொண்டு எப்பிடித்தான் போகப் போறானோ? இனி விடிய இருக்கிற நிலமையையும் பாத்துத்தான்...“