அதிகாரம் 9 : கண் மண் தெரியா நட்பு
கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை நந்தனுடன் பகிர்ந்து கொள்ளும் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.
“என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.”
“நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட முன்னூற்றி இருபது டொலர்கள்.”
அவள் தொடர்ந்தும் நந்தனின் நண்பியாக, தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பாள்.
“இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாது” என்றாள் புங். நந்தனுக்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.



