ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்
சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா,
கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக்
கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி
அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.
இதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து
வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள்
எழுதியுள்ளார்.








