50 வார்த்தைகளுக்குள்
ஒரு குறும்கதை – 8
பொன்னுத்துரை
அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது இங்கே கடும் குளிர். புதித்தாகப் புட்டுக்குழல் அணிந்து
சந்தி வரையும் நடை பழகினார். ஊரில் சாரம் அணிந்தவருக்கு அது புதிசு.
ஆடையில்
இருந்து விலைப்பட்டியல் நீண்டு தொங்கியது. எதிரே வந்த சீனாக்காரன் குனிந்து லேபலில்
விலையைப் பார்த்தான். 30 டொலர்கள்.
அடுத்தநாள்
சீனாக்காரனும் மனைவியும் ஜாக்கிங் வருகையில் அவர்களது ஆடைகளிலும் விலைப்பட்டியல் தொங்கியது.
இப்போது
எல்லாரும் லேபலைத் தொங்க விட்டபடி திரிகின்றார்கள்.
No comments:
Post a Comment