50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 9
மைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு
என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினியைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை
அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.
உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.
”லம்போகினியும் பழுதாகுமா?”
முழுசிப் பார்த்தான்.
காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான
மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.
மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, காரின் நான்கு
பக்கமும் செங்கற்கள் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment