Thursday, 28 July 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

By
Kathir Balasundaram

Chapter 12

Money Talks

Haran Kandiah returned to Jaffna by Thursday night—the same night of Raman’s suicide. His stay at the Kilinochchi Base Hospital had at least allowed him to breathe again and get his asthma back under some measure of control. He returned determined to raise the sixteen million rupees and rescue his sister from the clutches of the wretched Tamil Tigers.
First, he called his niece, Dr. Maithily Rooban in Australia. To his surprise, she was already aware of the situation regarding her mother. Her nervous voice spoke volumes about the tension the younger woman was under. “Mama,” she said using the familiar Tamil term for ‘uncle.’ “My husband and I just bought a rather large house. We don’t have a dime right now. Our mortgage and utilities are taking everything we make.” Haran heard her swallow hard. “My husband recently took out a loan of 18,000 US dollars to help pay for a dowry for his sister…Mama, I don’t know what to do!”

Monday, 25 July 2016

உள்ளொன்று வைத்து! - சிறுகதை.

களம் ஒன்று : கதை இரண்டு

முதலாவது கதை : உள்ளொன்று வைத்து!


எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து , சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார் கிழவர். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான்  பொன்னுக்கிழவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார்.

Wednesday, 20 July 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்




2.   புதிய காவியம்


1977 தேர்தலை அடுத்து யூனியன் கல்லூரியை மேனிலைப் படுத்த விரும்பிய சிலர், அதன் முகாமைத்துவ-நிர்வாகச் சுமையை எனது தலையில் சுமத்திவிடுவதில் சுறுசுறுப்பாகவிருந்தனர். அவ்வாறானவர்கள் பாடசாலைக் குள்ளும் இருந்தனர், வெளியிலும் இருந்தனர். பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த அவசரம் அது. சிலர் அதனையே விதியின் திருவிளையாடல் என்றும் சொல்வார்கள். அப்படி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. நான் எந்தப் பக்கம் சாயலாம் என்று யோசிப்பவன்.

Friday, 15 July 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

 

1. கருவோடு வந்த திருப்பணி


சாம்பலி லிருந்து எழுந்து வந்த
பீனிக்ஸ் பறவை யன்ன,
யூனியன் கலைமகள் எழுச்சி பேசும்
காவியம் கேட்டு மகிழ,
வருக! வருக! வருக வென்று
வாழ்த்தி வரவேற்கின்றேன்.   

Sunday, 10 July 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION


By

Kathir Balasundaram

Chapter 11

One Day Principal

The previous Wednesday, Watcher Raman left Vembady Girls’ College to return to his home village of Puttur, thirteen kilometers north of the City of Jaffna. He had his own ideas of what to do about Lieutenant Earless’ order to report to Kilinochchi for investigation. Most people, when receiving such an order, obeyed reluctantly, knowing full well the likelihood of ever returning. Still they clung to a measure of hope, so they went. Not Raman. He had no intention of going to Kilinochchi.
The twenty-three year old primary school dropout analyzed his problem like a scholar researching for his thesis. He imagined the torture and cruelty he would suffer at the Tamil Tigers’ hands. His mind conquered up images of burning flesh, bloody knives, and broken bones. He didn’t want to die, but being tortured to death seemed a worse fate by far. If he had to die, better to go quick. He had no desire for a slow, lingering, painful death.

Tuesday, 5 July 2016

மவுஸ் – அறிவியல் புனைகதை



காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்(Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.

செய்தி இதுதான்.

|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

எத்தகைய இருட்டடிப்பு இது!

Sunday, 3 July 2016

அவரவர் அவசரம்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

ராம் வேலை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. காலையில் நடந்த நேர்முகப்பரீட்சைக்கு மாலைக்குள் முடிவு சொல்வோம் என்றார்கள். பதிலுக்காகக் காத்திருந்தான்.

தொலைபேசி அடித்தது. பதறியபடி எடுத்தான். மறுமுனையில் இலங்கையில் இருக்கும் அண்ணா.

“மகளுக்கு கலியாணம். முடிஞ்சதை அனுப்பு.

வங்கிக் கணக்கை அண்ணா சொல்லுகையில் ராமின் கைபேசி அடித்தது.

“அண்ணா... லைனிலை இருங்கோ 


கைபேசியில் வேலை கிடைக்கவில்லை என்ற செய்தி. மீண்டும் அண்ணா...என்ற போது மறுமுனையில் ரெலிபோன் வைக்கப்படிருந்தது.

Saturday, 2 July 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (13)


அதிர்ச்சி தரும் மின்னஞ்சல்கள்

ஒரு சங்கத்தின் செயற்குழுக்கூட்ட அறிக்கையை, சங்கத்தில் முடிவெடுக்காமல் வேறு ஒருவருக்கும் அனுப்புதல் கூடாது. முன்னர் மெல்பேர்ணில் ஒரு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு சம்பந்தமான மின்னஞ்சலை, செயற்குழு உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும் அனுப்பியிருந்தார். ஒருவேளை செயற்குழுவில் அவர் சம்பந்தமாகக் கதைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு அனுப்பக்கூடாது என்பதே முறையாகும்.

பிறிதொருநாள் ஒரு எழுத்தாளர் இறந்த விடயத்தை அவர் மின்னஞ்சல்மூலம் பலருக்கும் தெரிவித்திருந்தார். இறந்தவரின் புகைப்படம், இரங்கல் செய்தி, ஈமைக்கிரியை நடைபெறும் இடம் நேரம் முதலிய விபரங்கள் அதில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால்,

இறந்தவருக்கும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்ததுதான். ஆவிகள் மின்னஞ்சல் பார்ப்பதில்லை என்றாலும் எங்களுக்கு பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது.


இந்தக் cut & paste வந்தபிறகுதான் – கவிதைக்கு நாசம், சிறுகதைக்கு நாசம் இப்ப மின்னஞ்சலுக்கும் நாசம்.

Friday, 1 July 2016

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

 போட்டிகள் பற்றிய பொது விதிகள்