சமீபத்தில், மெல்பேர்ணில் ஃபிளமிங்ரன் (Flemington)
என்னும் இடத்தில் மதியம் உணவருந்தப் போகும்போது, ஒரு அரிய காட்சியை வீதியில்
கண்டேன்.
ஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் சிலர் கையை நுழைத்து எதையோ
நோண்டியபடி இருந்தார்கள். சாவதானமாக என்ன நடக்கின்றது என அருகில் நின்று
பார்த்தேன்.
குளிர்சாதனப்பெட்டிக்கு மின் இணைப்பு இருக்கவில்லை.
பாவனையற்ற, பழுதாகிப்போன குளிர்சாதனப்பெட்டி அது.
அதற்குள்: சிலர் புத்தகங்களை வைப்பதும், சிலர்
எடுப்பதுமாக இருந்தார்கள். அது ஒரு குட்டி நூல்நிலையம். பின்னர் அதன் இரண்டு
கதவுகளையும் இறுக மூடிவிட்டுப் போனார்கள்.
நான் அதனைத் திறந்து உள்ளே பார்த்தேன்.
பழையதும் புதியதுமான ஆங்கிலப் புத்தகங்கள் அங்கே இருந்தன. அந்தக் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து யாரும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், யாரும் புத்தகங்களை வைக்கலாம். படிப்பதற்கும் கால வரையறை கிடையாது.
பழையதும் புதியதுமான ஆங்கிலப் புத்தகங்கள் அங்கே இருந்தன. அந்தக் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து யாரும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், யாரும் புத்தகங்களை வைக்கலாம். படிப்பதற்கும் கால வரையறை கிடையாது.
நான் நியூசிலாந்தில் இருந்தபோது, வீடுகளின் முன்னால்
தாம் வாசித்து முடித்த, தமக்குத் தேவையில்லாத புத்தகங்களை வைத்திருப்பதை
அவதானித்திருக்கின்றேன். யாரும் அதை எடுத்துச் செல்லலாம். அவுஸ்திரேலியாவிலும்
இந்த நடைமுறை இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் ஒரு நீட்சியாகவே இந்த
குளிர்சாதனப்பெட்டி நூல்நிலையத்தை நான் பார்க்கின்றேன்.
வீடுகளின் முன்னால் வைக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிலரே
அதனால் பயன் பெறலாம். இந்த குளிர்சாதனப்பெட்டி நூல்நிலையத்தினால் பலரும் பயனடைய
வாய்ப்புண்டு.
இதேபோல் மெல்பேர்ண் சிற்றிக்குள் இன்னும் இப்படி இரண்டு
நூல்நிலையங்கள் இருப்பதாக அறிகின்றேன்.
நம்ம ஊர்ல பெட்டியே காணாமப் போயிடும்!
ReplyDelete