(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)
கஸ்டப்பட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றும் தந்தை
மகனையிட்டுக் கவலை கொண்டார்.
வயது பத்தொன்பது. படிப்பைக் குழப்பிவிட்டான். வேலையும்
இல்லை. ஷொப்பிங் சென்ரர்களில் திருடுகின்றான்.
பொலிஸ் வந்து தந்தையை எச்சரிக்கை செய்வார்கள். மகன்
தப்பிவிடுவான்.
“மகனே! ஐஞ்சுக்கும் பத்துக்கும் திருடி என்ரை மானத்தை
வாங்காதை. திருடுவதென்றால் பெரிசாச் செய். என்னையும் நல்லா வாழ வை. நீ போய்
ஜெயிலிற்குள் சிலகாலம் இரு” என்றார் தந்தை.
மகன் ஆடிப் போனான்.
No comments:
Post a Comment