Friday, 5 February 2016

எதிர்பாராதது! - 2 (சிறுகதை)


நாங்கள் இங்கு வந்த விஷயம் - நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

Wednesday, 3 February 2016

எதிர்பாராதது! - 1 (சிறுகதை)




இரவு ஒன்பது மணியாகியும் சூரியன் மறையவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சண்முகமும் வசந்தியும் மேல்மாடி அறைக்குச் சென்றார்கள். மாடிவீட்டில் நான்கு அறைகள் இருந்தன. பாத்றூம், ரொயிலற்றுக்குப் பக்கத்திலிருந்த அறையை அவர்களுக்காக ஒதுக்கியிருந்தான் ஈசன்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கேட்கும்போதே குரலில் ஒரு இடறல் விழுகிறது. கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா பிடிச்சிருக்கு! இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை வந்த விஷயத்தைப் பாருங்கோ."

Saturday, 30 January 2016

His Royal Highness, The Tamil Tiger - noval

by
Kathir Bala Sundaram

A Word from the Author

The new millennium dawned on a world shaken by the emergence of two violent terror organizations: the Tamil Tigers and Al-Qaida. Al-Qaida is a byproduct of the Tamil Tigers. The Srilankan forces ruthlessly defeated the seemingly invincible Tamil Tigers at the Battle of Mullivaikkal in 2009. A fact that came to light was that Sri Lanka government received military aid from more than twenty-five countries in order to finally crush the Tamil Tigers, the world’s deadliest terrorists.
 This novel, ‘His Royal Highness the Tamil Tiger’, explores only a minute portion of the Tamil Tigers’ atrocities and carnage they inflicted on the Tamil community—their own brothers and sisters—in Jaffna from 1972 to 2009. Jaffna rests in the northern part of the pearl shaped island of Sri Lanka. The island, sitting somewhat snug to the southern tip of India and within the Indian Ocean, suffered terribly at the hands of the Tamil Tigers.

Thursday, 28 January 2016

அப்பு ஸ்ரைல்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 8

பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது இங்கே கடும் குளிர். புதித்தாகப் புட்டுக்குழல் அணிந்து சந்தி வரையும் நடை பழகினார். ஊரில் சாரம் அணிந்தவருக்கு அது புதிசு.

ஆடையில் இருந்து விலைப்பட்டியல் நீண்டு தொங்கியது. எதிரே வந்த சீனாக்காரன் குனிந்து லேபலில் விலையைப் பார்த்தான். 30 டொலர்கள்.

அடுத்தநாள் சீனாக்காரனும் மனைவியும் ஜாக்கிங் வருகையில் அவர்களது ஆடைகளிலும் விலைப்பட்டியல் தொங்கியது.

இப்போது எல்லாரும் லேபலைத் தொங்க விட்டபடி திரிகின்றார்கள்.