Tuesday, 28 April 2015

தப்பிப் பிழைத்தல் - சிறுகதை




கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, தட்டிப் பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது.

இந்திரன் மிகவும் கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில் பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே கழிகின்றது.

"என்ன! இன்னும் ஒரு பத்து வருஷம் உழைச்சேனில்லை. அதுக்குப் பிறகு உடம்பு ஆட்டம் கண்டுவிடும்."

தொலைபேசி அழைப்புகள்
இந்திரனது உறக்கத்தைக் கலைக்கும்போது அவர் கடுப்பாகிப் போகின்றார். இன்று அவருக்குப் பகல் வேலை இல்லை. 'றோஸ்ரர் டே ஓஃப்'. உடம்பு அசதி தீர நன்றாகப் படுத்து உறங்கலாம் என நினைத்திருந்தார்.

Sunday, 26 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்


அதிகாரம் 27 - சின்னக் கணக்கு

குட்டிப் போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன்.

வீதியை அகலமாக்கி, கல்லடுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. காலையில் தொடக்கம் இரண்டு பெரிய கல்நெரிக்கும் எந்திரங்கள் பகல் முழுவதும் இரைந்து கொண்டிருந்தன. வேலை ஆட்கள் எல்லாம் புது முகங்கள். சீன தேச நன்கொடையில் அமைக்கும்வீதி.
வேலையாட்கள் வேலை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.
●

பிள்ளைகளே, சென்ற வகுப்பில் நாவல் மரத்தின் கீழ் கண்ணயர்ந்து போனேன் என்று கூறி முடித்தேன். இன்று அதன் தொடர்ச்சி.
●

கண்விழித்த பொழுது இருவர் ஸ்ரெச்சரில் என்னை வளர்த்துவது தெரிந்தது. செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் செல்லவில்லை.

கப்பலில் பிரயாணம் செய்தேன்.

Monday, 20 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 26 - அதிகார போட்டி

நான் மாட்டுத் தொழுவத்திலிருந்து திரும்பி வந்து விருந்தாளிகள் அறைக்குள் கால் வைத்தேன். பிள்ளைகள் அங்கு ஏலவே வந்திருந்தனர். அவர்கள் போர் முடிவை அறிய ஆவலாக இருந்தனர். குறிப்பாக அண்ணையைப் பற்றி அறிய ஆர்வம் காட்டினர். வதனங்களில் அவர்களது உள்ளத்து ஏக்கம் சோகம் பளிச்சென தெரிந்தது.

‘பிள்ளைகள். இன்றைக்கு ஆனந்தபுரம் போருக்கு முந்திய நாலாம் ஈழப் போர் தொடங்கி இறுதி ஆட்டம் வரை."
●

Wednesday, 15 April 2015

வர்ணபேதம் - சிறுகதை


ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டிருந்த சிவி இன்று அதிகாலை ஆறுமணிக்கே எழும்பி விட்டாள். ஞாயிற்றுக்கிழமைகளில் வழமையாக பத்துமணி மட்டில்தான் சிவி நித்திரை விட்டு எழும்புவாள். இன்று சிவிக்குப் பரிசளிப்பு விழா. 'ஹரிப்பொட்டர் கலறிங் கொம்பிற்றிசனில்' எட்டுவயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் சிவிக்கு முதலிடம் கிடைத்திருந்தது. பரிசு பெறும் உற்சாகம் அவளை நித்திரையிலிருந்து எழுப்பியிருக்க வேண்டும். பதினொரு மணி மட்டில் 'ஆக்லாந்து' பிரதான நகரத்தினுள்ள நூல் நிலையத்திற்கு வந்து சேரும்படி விழா நடத்துபவர்கள் கேட்டிருந்தார்கள்.

                இந்த வர்ணம் தீட்டும் போட்டியில் சிவி கலந்து கொண்டதே ஒரு தற்செயலான நிகழ்ச்சிதான். ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகாமையிலுள்ள கடைக்கு போய்விட்டு வரும்போதுதான் அந்த பஸ்சைக் கண்டேன். அது ஒரு நடமாடும் நூல் நிலையம். வயது முதிர்ந்தவர்களுக்கும் இயதாவர்களுக்குமாகத்தான் அந்தச் சேவையை அவர்கள் அரம்பித்திருக்க வேண்டும். ஒருதடவை அதை எட்டிப் பார்க்கலாம் என்று போனேன். சொற்ப அளவு புத்தகங்களே அதற்குள் இருந்தன. வயதில் முதிர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வாசித்து முடித்த புத்தகங்களைத் திருப்பிக் குடுத்துக் கொண்டு நின்றார்கள். அதற்குள்ளிருந்த பெண் கனிவுடன் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.