Thursday, 1 January 2015

போட்டிகளும் பரிசுகளும் - Flashback


 

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கந்தர்வன் நினைவாக ஒரு சிறுகதைப்போட்டி வைத்தது. அதில் எனது சிறுகதை ‘எதிர்கொள்ளல்மூன்றாவது இட்த்தைப் பெற்றது. புதுச்சேரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயகாந்தன் அவர்கள் பரிசு வழங்கியிருந்தார்கள். 

விழாவில் கலந்து கொள்ளாமையையிட்டு கவலை தெரிவித்து நா.முத்துநிலவன் அவர்கள் மின்ன்ஞ்சல் செய்திருந்தார். எனக்கும் அந்தக் கவலை இருந்தது. இன்றும் இருக்கின்றது. எனது பரிசுத்தொகை 2000. பரிசுத்தொகைக்குப் பதிலாக புத்தகங்கள் வாங்கி அனுப்ப முடியுமா? என்று ஒருங்கிணைப்பாளரான நா.முத்துநிலவ்னிடம் கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு விஷயமே தெரியவந்த்து. புத்தகங்களைக் காட்டிலும் அதை அனுப்புவதற்கான செலவு அதிகமாகவிருந்த்து.  மாற்றீடாக யாராவது அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்றால் அவர்களிடன் குடுத்துவிடலாம் என்றார் அவர். அப்போது வருடாவருடம் இந்தியாவில் புத்தகத்திருவிழா நடைபெறும் நேரம். அந்த நேரம் நமது மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இந்தியா செல்வதாக அறிந்தேன். அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தேன். புத்தகத்திருவிழாவின் போது குமரன் பதிப்பகத்தினர் ஒரு ஸ்ரோல் வைத்திருந்தார்கள். அங்கேயே புத்தகங்கள் பரிமாறப்பட்டன. சிரம்ம் பாராது அந்தப் புத்தகங்களை முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு எடுத்துவந்திருந்தார். அத்தனை புத்தகங்களும் முத்துக்கள். புத்தகங்கள் கிடைத்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிடைத்த புத்தகங்கள் – கந்தர்வன் கதைகள்(முழுத்தொகுப்பு), திரைக்கதை எழுதுவது எப்படி?/சுஜாதா, கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது / அ.முத்துலிங்கம், புதுமைப்பித்தன் கதைகள்/ச.தமிழ்ச்செல்வன், ஜமீலா / சிங்கிஸ் ஜத்மாத்தவ், ,மிதமான காற்றும் இசைவான கடல்லையும் / ச.தமிழ்ச்செல்வன் கதைகள், எச்சங்கள் சிறுகதைத்தொகுப்பு, சீவன் / சோளகர் தொட்டி.



அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பம் மீண்டும் இப்போது. சாரு நிவேதிதா விமர்சக வட்டம் சிறுகதைப் போட்டி. இந்தப் போட்டியே ஒரு புதுவித அனுபவம். நான்கு நடுவர்கள் ( மைந்தன் சிவா, பிச்சைக்காரன், ராஜ ராஜேந்திரன் மற்றும் வால் பையன்)   அவர்கள் இலக்கங்களாலேயே அறியப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் 20ற்கு புள்ளியிட்டார்கள். வந்து சேர்ந்த கதைகளில் (128), 15ஐத் தேர்ந்தடுத்தார்கள். நடுவர்களில் இருவர் கதை பறிய தமது கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்கள். அதன்பின்னர் 15 கதைகளும் வாசகர்களின் தெரிவுக்காக விடப்பட்டன. தமது பெயர்களைப் பதிவு செய்து, verify செய்யப்பட்ட வாசகர்களின் like க்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு 20ற்கு புள்ளியிட்டார்கள்.

நடுவர்களின் மதிப்பீட்டில் முதலிடம் பெற்ற எனது கதை (கேள்விகளால் ஆனது) பின்னர் வாசகர்களின் தெரிவால், ஐந்தாவது இட்த்தைப் பெற்று மூன்றாம் பரிசினை வென்றது.

இவர்களிடமும் (சின்னதாதா) எனது பரிசுத்தொகைக்குப் பதிலாக சாரு நிவேதிதாவின் புத்தகங்களை அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தேன்.

அவர்கள் அனுப்பிய புத்தகங்கள் - சினிமா சினிமா, காமரூப கதைகள், சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல், தப்புத்தாளங்கள், கனவுகளின் நடனம் : சினிமா பார்வைகள், மழையா பெய்கிறது : சர்ச்சைகள், ஒழுங்கின்மையின் வெறியாட்டம் : நேர்காணல்கள், வரம்பு மீறிய பிரதிகள், கலகம் காதல் இசை, மலாவி என்றொரு தேசம் : சாரு நிவேதிதா அண்ணாமலை கடிதங்கள், ஸீரோ டிகிரி – திருத்தப்பட்ட பதிப்பு, எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது, தீராக்காதலி, மூடுபனிச் சாலை, தாந்தேயின் சிறுத்தை : விவாதங்கள் விமர்சன்ங்கள் என மொத்தம் 15 புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். சிட்னியில் இருக்கும் கார்த்திகேஜன் முருகேசன் என்பவர் மூலம் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன.

1 comment:

  1. எனது வலைப்பக்கம் பார்க்க வருக நண்பரே! - நா.முத்துநிலவன்
    http://valarumkavithai.blogspot.com/ வணக்கம்

    ReplyDelete