Sunday, 28 February 2016

நரகத்திற்கு


 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 12
 சிவநாயகத்திற்கு அவுஸ்திரேலியாவில் பல பிள்ளைகள் இருந்தார்கள். இருப்பினும் கடைசி மகன் தினேசுடன்தான் அவருக்குக் கூடுதல் ஒட்டுதல்.

தந்தையர் தினம் வந்தது. தினேஸ் அவரை சினிமாவுக்கு  ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். இரவு உணவு முடிந்து திரும்புகையில் அவருக்கு குளிருடுப்பு, சப்பாத்து, ‘சிவாஸ் றீகல்’ வாங்கிக் குடுத்தான்.

போத்தல் உள்ளே இறங்க, நாதம் பிறந்தது.

 “இதைப் போல ஒவ்வொரு வருஷமும் நீ செய்யாட்டில் நரகத்துக்குத்தான் போவாய்” என்றார் அவர்.

Thursday, 25 February 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION





by

Kathir Bala Sundaram


Chapter 2

Reign of Mockery


Vice Principal Priya appeared cheerful enough as she led the Smiling Minister into the large auditorium. As soon as the Minister entered, the students stood and began clapping enthusiastically. It became a constant drone as the Minister and his five Tamil soldiers climbed onto the three foot high platform and sat down in their respective seats. Large yellow and black striped curtains covered the entire rear section of the platform depicting the school colors.

Principal Vasantha joined the rest of her colleagues at the back of the auditorium, her wide smile revealed her ignorance of the chaos about to descend upon her.

Friday, 19 February 2016

தந்திரம்


 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 11

அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன். காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.

அன்றும் அப்படித்தான்.

மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.

தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான். மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் கொடுக்கின்றேன் என்றேன்.


மெதுவாக நழுவி விலகினான்.

Thursday, 18 February 2016

நான் ஓர் அகதி



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 10

அவுஸ்திரேலியாவிற்கு நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், மில்லியனர்.

ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான் என்றான்.

வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான். அற விலைக்கு வீட்டை அவனே விற்று தன் பணத்தை எடுத்தான்.


மீண்டும் வாடகை வீட்டில் நான்.

Sunday, 14 February 2016

யெளவனம் - சிறுகதை


கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக் கொண்டான்.  'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம் இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். 

Wednesday, 10 February 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

by


Kathir Bala Sundaram


Chapter 1
Behind the Smile  

A Mitsubishi Pajero jeep left the Town of Kilinochchi carrying soldiers of the Tamil Tiger Vanni regime. Their destination was the celebrated Vembady Girls’ College* in the City of Jaffna. They were dressed in civilian clothing as required by the Cease Fire Agreement of 2002 between the racist Sri Lanka government and the insurgent Tamil Tigers. They accompanied the Minister of Political Affairs. Not a single soldier—the Minister included—had any idea what they were walking into. Neither could they comprehend the complete and utter turmoil that would result from the defiance of two thousand young ladies of the Vembady Girls’ College.
It was the first Wednesday in January, 2006, and all schools in the Jaffna peninsula were just beginning their first term. Students rushed about the city of Jaffna on bicycles or on foot, winding in and out of tall palmyra groves. School buses bounced along the unrepaired roads in an effort to deliver students to their destinations on time. By 9:00 a.m. Vembady Girls’ College was in full swing.

Monday, 8 February 2016

விரைவில் சந்திப்போம்

கங்காருப் பாய்ச்சல்கள் (9)

வைத்தியசாலைகளிலும், வாகனங்கள் திருத்தும் இடங்களிலும் ‘விரைவில் சந்திப்போம் – See you soon!) என்று கூறுபவர்களை நான் வெறுக்கின்றேன்.

நாம் எப்படித்தான் அவதானமாக இருந்தாலும் சிலவேளைகளில் வாகனவிபத்து நேர்ந்து விடுவதுண்டு. விபத்து வருவது நம் கையில் மாத்திரம் இல்லை.

கார்த்தரிப்பிடங்கள், ஷொப்பிங் சென்ரர்களில் நடக்கும் விளையாட்டுகளை நான் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கின்றேன். காரை றிவேர்ஸ் செய்யும்போது அடுத்த காரை முட்டி மோதி, அப்போது. கேட்கும் சத்தத்தை அடையாளமாக வைத்துக் கொள்வார்கள். சத்தம் கேட்டவுடன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல வேகம் எடுத்துக் கார் பறந்துவிடும். அதே போல காரை நிறுத்தும் போது முன்னாலே உள்ள காரை முட்டி மோதிவிட்டால், காரைத் திரும்ப எடுத்து ஒன்றுமே நடவாதது போல வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிடுவார்கள்.

இப்படித்தான் ஏதாவது ஷொப்பிங் சென்ரரில் எனது காரும் அடிபட்டிருக்க வேண்டும்.

Sunday, 7 February 2016

லம்போகினி கார்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 9

மைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினியைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.

உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.

”லம்போகினியும் பழுதாகுமா?”

முழுசிப் பார்த்தான்.

காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.


மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, காரின் நான்கு பக்கமும் செங்கற்கள் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.

Friday, 5 February 2016

எதிர்பாராதது! - 2 (சிறுகதை)


நாங்கள் இங்கு வந்த விஷயம் - நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

Wednesday, 3 February 2016

எதிர்பாராதது! - 1 (சிறுகதை)




இரவு ஒன்பது மணியாகியும் சூரியன் மறையவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சண்முகமும் வசந்தியும் மேல்மாடி அறைக்குச் சென்றார்கள். மாடிவீட்டில் நான்கு அறைகள் இருந்தன. பாத்றூம், ரொயிலற்றுக்குப் பக்கத்திலிருந்த அறையை அவர்களுக்காக ஒதுக்கியிருந்தான் ஈசன்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கேட்கும்போதே குரலில் ஒரு இடறல் விழுகிறது. கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா பிடிச்சிருக்கு! இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை வந்த விஷயத்தைப் பாருங்கோ."