வத்சலா
கோயிலுக்குப் புறப்படும்போது, வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி வந்தாள்.
“வீட்டை
மொப் பண்ணிப்போட்டு, பத்றூம் ரொயிலற்றைக் கிளீன் பண்ணிவிடு. மகளிட்டை 50 டொலர் குடுத்திருக்கிறேன்.
மறக்காமல் வாங்கிக் கொண்டு போ.”
வேலைக்காரி
ஆமாப் போட்டாள்.
வத்சலாவின் கோவில்
தரிசனம் முடிந்தது.
“ஐயா…
இண்டைக்கு நான் என்ன செய்யவேணும்?” ஐயரிடம் கேட்டாள் வத்சலா.
”எல்லாத்தையும்
மொப் பண்ணிப்போட்டு, கோயில் ரொயிலற்றையும் ஒருக்கா சுத்தம் செய்து விடுங்கோ” ஐயர் சொன்னார்.
கோயிலில் செய்தால் புண்ணியம் வீட்டில் செய்தால் தரக்குறைவு
ReplyDelete