Friday, 26 February 2021
"வளர் காதல் இன்பம்" குறு நாவல் - வாசகனின் பார்வை
ஸ்டால் நம்பர் 10 & 11 இல் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.)
அவுஸ்திரேலியாவில் சிறுகதை, குறுநாவலில், முத்திரை பதித்தவர்தான் பொறியியல் பட்டதாரியான கே.எஸ். சுதாகர் அவர்கள். ஒருவரியை எழுதினாலும் ஓராயிரம் வரிகளை எழுதினாலும் வாசிப்பவர் மனதில் பதியும் வண்ணம் எழுதுகின்ற எழுத்து ஆழுமை மிக்கவர்தான் சுதாகர் அவர்கள். அவர்களின் கைவண்ணத்தில் "வளர் காதல் இன்பம்" என்னும் குறு நாவல் நூலுருப்பெற்று தற்போது சென்னையில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்தவர் , குறிப்பாக பொறியியலாளராக இருக்கின்றவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தமிழையும், எழுதுவதையும், விடாமல் தொடருகிறார் என்னும் பொழுது அவரைக் கட்டாயம் பாராட்டி வாழ்த்தியே ஆகவேண்டும்.
Thursday, 25 February 2021
Monday, 22 February 2021
ஏன் பெண்ணென்று... - குறுநாவல்
இன்றிலிருந்து 5 நாட்களுக்கு kindle இல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பிற்கு Amazon
வலதுகாலை
எடுத்து வைத்து மணமக்கள் வீட்டிற்குள் சென்றார்கள். பத்மினியின் தாயாரால்
நிமிர்ந்து நிற்கமுடியாது. நாரியிலே கையூன்றி, ஊன்றிய இடத்திலிருந்து நிமிர்ந்து
மணமக்களைப் பார்த்தார். சந்திரமோகனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்துவிட்டது. மரியாதை நிமிர்த்தம் அடக்கி நின்றான். இராகுகாலம்
முடிவதற்குள், மணமக்களை அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார்
கணபதிப்பிள்ளை.
ஹோட்டல் றூம் தோற்றுப் போய்விடும். உயர்ந்த கட்டில். மடிப்புக் கலையாத படுக்கை விரிப்புகள். அறை முழுவதும் முட்டி நின்று, வாசலைத் திறந்ததும் பறந்தோடிட நிற்கும் பாரிஸ் சென்றின் நறுமணம். மங்கிய நிலவொளி பரப்பி நிற்கும் நீலநிற `நைற் பல்ப்’.
சம்பிரதாய உரையாடல்களில் சில நிமிட நேரம் சுகித்திருந்தனர். மினியின் மேனியைப் போர்த்திருந்த கூறை சரசரவென்று அகல, மினி நைற்றியில் நின்றாள். மினியின் அழகில் சொக்கி நின்ற சந்துறு, அவளை இழுத்துப் பறித்துக் கட்டிலில் சரித்தான். முதல் தடவையாக அவளை உற்று நோக்கினான். ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக எத்தனித்தான். வாய் இடறியது. இடறிய வாய் இடறியதுதான்.
“நீ இதற்கு முன் இப்படி யாருடனாவது படுத்து இருக்கின்றாயா?”
Friday, 19 February 2021
வளர்காதல் இன்பம் - குறுநாவல்
தமிழ் இலக்கியவானில் மிளிரும் நட்சத்திரம்
இலங்கையில் 1983 ஆண்டு நடந்த இனக்கலவரத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த போரினாலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் தங்கள் சொந்த மண்ணிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட எங்களில் சிலர் மேற்கு நோக்கிக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தோம், அதேசமயம் சிலர் கிழக்குநோக்கி அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில், தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நண்பர் கே.எஸ்.சுதாகரும் ஒருவராவார். புலம்பெயர் தமிழர்களின் இலக்கிய வளர்ச்சியில், தமிழ் இலக்கியவானில் கிழக்கில் இருந்து ஒளிதரும் நட்சத்திரமாக அவர் இன்று மிளிர்வது ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.
Thursday, 11 February 2021
Friday, 5 February 2021
கொரோனா மணி - கங்காருப் பாய்ச்சல்கள் (34)
சமீபத்தில் Port Campbell என்ற இடத்திற்குப் போயிருந்தோம். கடற்கரையையொட்டிய நகரம். Twelve Apostles பிரசித்தம். மெல்பேர்ணில் இருந்து 225 கி.மீ தூரத்தில் இருக்கின்றது.
இரவுச் சாப்பாட்டிற்காக அலைய வேண்டியதாயிற்று. நேரம் ஆறுமணியைத் தாண்டிவிட்டது. கூகிளில் சில சாப்பாட்டுக்கடைகளைப் பார்த்து, அங்கே போனால் அவை பூட்டியிருந்தன. கடைசியில் ஒரு `fish and chips’ கடை திறந்திருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். உள்ளே போந்துபொலிந்திருந்த பெண்மணி ஒருவர் கசியரில் நின்றார். அவரிடம் எமக்கான உணவை ஓடர் செய்துவிட்டு உள்ளேயிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். குசினிக்குள் ஒருவர் படு பிஷியாக வேலை செய்துகொண்டிருந்தார். அவர் அந்தக் குண்டுப்பெண்மணியைப இடைக்கிடை பார்ப்பதும், அவர் பார்க்காத வேளைகளில் இவர் அவரைப் பார்ப்பதுமாக இருந்தனர்.
Thursday, 4 February 2021
அந்தச் சிலர் - கங்காருப் பாய்ச்சல்கள் (33)
சிலவேளைகளில், சிலர் சொல்லும் தகவல்கள் உண்மையாகவே அமைந்துவிடுவதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது, எனது அண்ணருக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு கலியாணம் முற்றாகிவிட்டது. ஒருநாள் திடீரென எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் வந்தார். வயதில் என் அம்மாவை ஒத்திருந்தார்.
”உங்களுக்கென்ன விசரே! அந்தப்பிள்ளைக்கு ஏதோ வருத்தம் இருக்கு. சின்னனிலை ஏதோ வருத்தம் வந்து, அம்மாக்காரி பாவட்டம் இலையை அவிச்சு அவிச்சுக் குடுத்ததை நான் கண்ணாலை கண்டனான். என்னவோ நான் சொல்லிறதைச் சொல்லிப்போட்டன். நீங்கள் இனித் தீர்மானியுங்கோ” சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.