கடைசியில்
அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வந்தது.
ஒரு கிழமைக்கு முன்பு,
கிளாலிக்கடலேரியில் - படகு கவிழ்ந்ததில்
அன்னம்மா ஆச்சி உட்பட ஐந்துபேர் மரணமானார்கள்.
இருளிற்குள் தலையைச்
சுவர்மீது முட்டி மோதி, கால்களை பரப்பிச் சுய நினைவற்றுக் கிடந்தாள் பவானி.
உலகம் அழிந்தொழிந்து
போனபின் ஏற்பட்டிருக்கும் மயான அமைதியக் குலைத்துக் கொண்டு - புதிதாகப்
பிறந்துவிட்ட ஏவாளெனக் குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகுரல் காட்டிற்குள்
வழிதவறிப் போய்விட்ட ஒரு குழந்தையின் அழுகுரலென பவானியின் காதில் விழுந்தது.
கால்கள் தானாகவே எழுந்து, இருளிற்குள்
நடந்து, அச்சொட்டாகக் குழந்தை
இருக்குமிடம் நோக்கியது. இங்கு இருளிற்குள் நடப்பதற்கு மனிதர்கள் எல்லாம் எப்போதோ
பழகிக் கொண்டுவிட்டார்கள். குழந்தை தெப்பமாக நனைந்ததில் உடம்பு விறைத்துப் போயிருந்தது.
முதன் முதலாக அன்னம்மா ஆச்சி இல்லாத வெறுமையை உணர்ந்தாள் பவானி.




