நிமிர்ந்து நில் -
வானம்
உனக்குத்தான்.
காதலும்
கத்தரிக்காயும்
கடைந்தெடுத்த
பூசணிக்காயும்
காகிதத்தில் கவிதைகள்
நீண்ட இரவும்
தெருநாயின் ஓலமும்
நிணமும் சதையும்
நிதமும் கவலைகள்
பரமார்த்தகுருவின்
சீடர்கள்
காவி உடை தரித்து
பார் ஆளுகின்றார்கள்
முகத்துக்கு
புகழ்மாலை கழுத்துக்கு
பூமாலை புறமுதுகுக்கு
விஷமிட்ட
கத்தி - என மனிதர்கள்
விலாங்கு
மீனாகப் பழகிக்
கொண்டார்கள்
காலம் மாறிய கடுகதி
வேகத்தில்
கலி கூப்பிடுதூரம் -
நாளொரு நாடு
நடுக்கடலில் அணு
பிளக்கும்
ஓர் பொழுதில்
உள்ளங்கையில்
'மவுஸ்' அழுத்தி ஒரு 'க்ளிக்' செய்தே
உலகத்தைப் பிளக்கும்
வரை
நி
மி
ர்
ந்
து
நி
ல்
அப்புறம்
வானம்
மட்டும்தான் உனக்கு!
No comments:
Post a Comment