நான் நூல் நிலையம் செல்லும் சமயங்களில் அடிக்கடி ஒரு வயது
முதிர்ந்தவரைச் சந்திப்பேன். அவர் தனது மனைவி மகளுடன் வந்து நிறையவே தமிழ்ப்
புத்தகங்களை எடுத்துச் செல்வார். ஒரு தடவையில் 25 புத்தகங்கள் மட்டில் இங்கு எடுத்துச்
செல்லலாம். ஒரு மாதம் வரையும் வைத்திருந்து படிக்கலாம். அவர் என்னைப் பார்த்துச்
சிரிப்பார். ஆனால் கதைக்க மாட்டார்.
ஒருமுறை ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நூல் நிலையத்தை
விட்டு வேகமாகக் கிழம்பிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை அவர் இடை மறித்தார்.
"என்ன ஒரு
புத்தகத்துடன் புறப்பட்டு விட்டீர்கள்! வாசிக்கின்றீர்களோ இல்லையோ நிறையப்
புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். அடுத்த தடவை வரும்போது அவற்றைப் போட்டு விட்டு, மீண்டும் நிறையப்
புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால் நமது தமிழ்ப்பிரிவை மூடி
விடுவார்கள்" என்று ஆதங்கப்ப்பட்டார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் உண்மை அதுதான். இந்த நூல் நிலையத்தில் இருக்கும்
தமிழ்ப்புத்தகங்கள் எவ்வளவு தூரத்திற்கு எமது மக்களைப் போய்ச் சேருகின்றதோ, அதைப் பொறுத்தே
அங்கு தமிழ்ப் பிரிவும் இருக்கும். அதிக தமிழ் மக்கள் புத்தகங்களை வாசிக்காவிடில்
தமிழ்ப் பிரிவை மூடி விடுவார்களாம்.
No comments:
Post a Comment