தமிழ்மொழியின் காலத்துக்கு சாட்சியாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள்(கிறிஸ்துவுக்கு
முன் 31 ஆண்டு)
போன்ற நூல்கள் உள்ளன.
|ப·றுளி யாற்றுடன்
பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள| - சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்)
இந்தப்பாடலின் மூலம் இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே ப·றுளி ஆறும், பல மலைத்தொடர்களும், குமரிமலையும் கடலில்
மூழ்கியது உறுதியாகின்றது. இங்கேதான் பாண்டியர் தலைநகரான மதுரை (இன்றிருக்கும்
மதுரை வேறு) இருந்துள்ளது. இங்கேதான் முதற்சங்கம் இருந்தது. இந்த மதுரையும்
கடற்கோளால் அழிந்தபின், கிழக்குக்
கரையோரத்தில் இருந்த கபாடபுரம் பாண்டியரின் தலைநகராகியது. இங்கு இடைச்சங்கம்
(இரண்டாம் தமிழ்ச்சங்கம்) உருவானது. இலக்கியங்கள் தோன்றின. பின்னர் இதுவும்
அழிந்தபின்னர் கடலே இல்லாத வைகை நதிக்கரை மதுரை பாண்டியரின் தலைநகராகியது.
கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
இந்துமாகடலை ஆய்வு செய்த ரஷ்யவிஞ்ஞானிகள் (Prof Bezrucov) வெளியிட்ட
அறிக்கையில் ஆதிமனிதனின் பிறப்பிடமாகக் குமரிக்கண்டம் (Lemuria) இருக்கலாம்
என்கின்றனர்.
Ice Age காலத்தில்
கடல்மட்டம் 500 - 600 அடி
தாழ்ந்திருந்தன. அப்போது ஜாவா, சுமாத்ரா ஆகிய நிலப்பரப்புகளும் நியூகினித்தீவுகளும்
அவுஸ்திரேலியாவின் வடபகுதி நிலப்பரப்புகளும் மெல்லிய அளவில் இணைந்திருந்தன.
அவுஸ்திரேலியாவில் இப்போதும் கூட களரி ஆட்டம் எனப்படும் நடனம்
உள்ளது. பழங்குடிகள் பலவகையான நடனங்களை ஆடுகின்றார்கள். நெற்றியிலே ஒரு கண்ணை
வரைந்து கொண்டு, இவர்கள்
ஆடும் அந்த ஆட்டத்திற்கு 'சிவா நடனம்' (Shiva Dance) என்று பெயர். உடல்
எங்கும் மூன்று கோடுகளாக வெள்ளை வர்ணத்தைப் பூசிக்கொள்கின்றார்கள். நெற்றியிலே
மாத்திரம் கிடையாகப் பூசிக்கொள்கின்றனர். Spencer, Killan என்பவர்கள் எழுதியுள்ள The Native Tribes of Central
Australia (Dover Publications, Inc., New York, 1968) என்ற புத்தகத்தில்
இதற்கானபுகைப்படங்கள் ஆதாரமாக (படங்கள் 128, 129 / பக்கங்கள் 621, 622) உள்ளன.
பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு 'வளரி' என்ற ஆயுதத்தைப்
பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் 'திகிரி' என்னும் பதம் இந்த 'வளரி'யையே குறிக்கின்றது.
பாடல் எண். 233 - பொய்யாய்ப் போக!
பாடியவர் : வெள்ளெருக்கிலையார்
" பொய்யா
கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை
பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள்
அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின்
பொய்யா கியரோ!" என்று
செல்கின்றது அந்தப்பாடல்.
'வளைதடி' என்று தமிழில்
சொல்லப்படும் இந்த 'வளரி' என்ற ஆயுதம்
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று
அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் 'பூமராங்' (boomerang) ஆகும். எனவே இந்த
ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது
ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால்
அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி
எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத்
திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.
மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் பரம்பலைக்
கீழேயுள்ள படத்தில் காணலாம். இந்த இனத்தின் பெயர்களாக (Tribes Names) - வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள்
இருப்பதைக் காணலாம். Alice
Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்தளவில் 'அருந்தா' இனக்குழுவினர்
உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர்.
ஏமு மனிதன் (Emu man), கங்காரு
மனிதர்கள் (Kangaroo
men), பிளம் மர மக்கள் ('Plum
tree' people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின்
உச்சரிப்பைக் காணலாம். 'Ten
Canoes' என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப்
பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள்
பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக்
காணலாம் ( * பின்னிணைப்பு 1
).
சிட்னியில் 'விண்மலே', 'காக்காடு' என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி
நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று
பெயர். 'கா' என்றால் சோலை, காடு என்றால் வனம்.
உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர்
வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு
ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் 'பூனங்கா யிங்கவா'. அதன் அர்த்தம் 'பெண்ணே இங்கே வா'. 'பூ நங்கையே இங்கே வா' என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.
ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை
வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு
பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய
ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும்
தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவர்களின் கருத்துப்படி 50,000
ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு
வந்து குடியேறியதாகவும், தற்போதைய
அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க
வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.
1974 இல் Mungo Lake (NSW) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு
ஒன்றினை ஆராய்ந்தபோது அது இந்தியப்பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக
விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.
* பின்னிணைப்பு
1
Macquarie
(Aboriginal words) என்ற புத்தகத்தில் உள்ளபடி,
Father -
papa (Tor/17.2), paapaa(Ngi/2.2) - அப்பா Pg 622
Mother - Ama
(Tor/17.2) - அம்மா Pg
660
Fire - thum
(Wik/16.6) Pg 624
Hill - Muli
(Bun/1.7) மலை Pg
640
Jaw - thakal
(Ngi/2.1) தாடை Pg 646
Leg - kar
(Wem/6.1) கால் Pg
650
Moon - pira
(Diy/11.8) பிறை Pg
659
Nose - Muruh
(Bun/1.1) மூக்கு Pg 665
Old Woman -
aka (Tor/17.3) அக்கா Pg
666
Person -
arelhe (Arr/13.3) ஆள் Pg 671
Thirsty -
yarka (Paa/3.2) தாக Pg
705
Sky - alkere
(Arr/13.8) ஆகாயம்,
karkanya (Paa/3.8) ககனம் Pg 690
Stone -
karnu (paa/3.7), karul (Ngi/2.7) கல் Pg 698
Tree -
madhan (Wir/5.14) மரம் Pg 709
Tease -
ngaiyandi (Kau/8.27) நையாண்டி Pg 703
You - nhii,
nhe (Dat/12.33) நீ Pg
723
Before -
muna (Kau/8.25) முன்பு Pg 588
Come - wara
(wem/6.17), wapa (Paa/3.17) வா Pg 605
Wind - yartu
(Paa/3.8) காற்று Pg 720
Face - mulha
(Diy/7.1) முகம் Pg
621
பின்னிணைப்பு 2
Arr - Arrernte - Aruntha (Central Australia)
Bun -
Bundjahing (NSW)
Dat -
Datiwuy (Northern Territory)
Diy - Diyari
(South Australia)
Kau - Kaurna
(South Australia)
Ngi -
Ngiyampaa (NSW)
Paa -
Paakantyi (NSW)
Tor - Torres
Strait Creole (Queensland)
Wem -
Wembawemba (Victoria)
Wik - Wik -
Mungkan (Queensland)
Wir -
Wiradjuri (NSW)
References
1.
Aboriginal Australia - Robyn Hodge
2. Macquarie
(Aboriginal words) - A dictionary of words from Australian Aboriginals &
Torres Strait Islander- Nick Thieberger
& William Mcgregor
3. The
Native Tribes of Central Australia - Baldwin Spencer and Francis James Gillen,
Dover Publications, Inc., New York,
1968
( Originally published by Macmillan & Co. Ltd, London in 1899)
4. வியக்க
வைக்கும் தமிழர் அறிவியல் - மாத்தளை சோமு
5. ABC
article 'DNA confirms coastal trek to Australia' by Nicky Phillips - 24.07.2009
No comments:
Post a Comment