"உங்களுக்கொரு
கடிதம். இலங்கையிலிருந்து ஒரு 'கேர்ள்'
போட்டிருக்கின்றாள்"
தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி.
பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது
வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் 'கவரில்' இருந்த பெயரை
மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க
வேண்டும். ஊகம் சரியானதுதான்.
வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் கிடைத்ததில்லை.
நாற்பத்தெட்டுக்கும் பத்தொன்பதிற்கும் இடையே எவ்வளவு இடைத்தூரம். வயதைத்தான் சொல்கின்றேன். கடிதத்தை அப்படியே இங்கே தருகின்றேன். அதில் எந்தவித புனைவிற்கும் இடமில்லை. கடிதத்தில் குழந்தமைத்தனம் இருந்தால் மன்னிக்கவும். அது அவளைச் சார்ந்தது.