யாருக்கு
எழுதுகின்றீர்கள்?
எனது புத்தக
வெளியீட்டுவிழாவிற்கு வருகை தருமாறு சொல்வதற்காக - சிட்னியில் எனது உறவினர்
ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது முதல் புத்தக வெளியீடு. அந்தப் பெண்
எனது முயற்சி பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் கணவன் ஒரு
பொறியியலாளர். அருகேயிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர், "நீங்கள்
யாருக்குக் கதை எழுதுகிறீர்கள்? குழந்தைப்
பிள்ளைகளுக்கா?" என்றார்.
"இல்லை! இல்லை!!
வளர்ந்தவர்களுக்குத்தான்" என்றேன் நான். அவர் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
"எங்களுக்காகக்
கதை எழுத நீங்கள் யார்?" என்பது
போன்ற வெறுப்பான பார்வை அது. அவரைப் பொறுத்தவரை, அவரை விட வயதில் முதியவர்கள்தான் புத்தகங்கள் போடலாம்
வெளியீட்டுவிழா நடத்தலாம் என்பது போன்று பிடிவாதம் கொண்டுள்ளார் போல் தெரிந்தது.
அதன்பிறகு நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரும் வரவில்லை. மனைவியையும் வர
அனுமதிக்கவில்லை.
யார் எழுத்தாளர்?
எதைப்பற்றி எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? சிந்தனை எழுகின்றது!
No comments:
Post a Comment