Saturday, 18 July 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 6


அகிலமே காத்திருக்கும்

வான் வெளியில் விண்மீன்கள்
     இருளுக்காய் காத்திருக்கும்.

தேய்ந்து வரும் வெண்ணிலவு
     பௌர்ணமிக்காய் காத்திருக்கும்.

ஆழ்ந் துறங்கும் ஆதவனோ
     விடியலுக்காய் காத்திருக்கும்.

காய்ந்திருக்கும் கானகமோ
     கடுமழைக்காய் காதிருக்கும்.


பரந்த கடல் சமுத்திரமோ
     பெரு நதிக்காய் காத்திருக்கும்.

ஓடிவரும் கடல் அலைக்காய்
     ஒரு கரை காத்திருக்கும்.

ஆடி வரும் தென்றலுக்காய்
     பூந்தோட்டம் காத்திருக்கும்.

மொட்டவிழ்த்த மலருக்காய்
     கருவண்டு காத்திருக்கும்.

களைத்து வரும் மனிதனுக்காய்
     நீள் நிழல் காதிருக்கும்.

கட்டவிழ்த்த கற்பனைக்காய்
     கவிதைகள் காத்திருக்கும்.

ஓவியன்தன் தூரிகைக்காய்
     ஓவியங்கள் காத்திருக்கும்.

சிற்பி அவன் சிலைக்காய்
     பெருங்கற்கள் காத்திருக்கும்.

ஆண்டவன்தன் அருளுக்காய்

     அகிலமே காத்திருக்கும்.

1 comment:

  1. அற்புதம்
    காத்திருப்புக்களை மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete