Friday, 8 April 2016

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 2) - சிசு.நாகேந்திரன்

தலைமுறை இடைவெளியை நிரப்புவது எப்படி?

      தலைமுறை இடைவெளி என்னும்போது, புலம்பெயர்ந்திருக்கும் ஒரு தலைமுறை யினருக்கும் அவர்களுடன் வாழும் (புலம்பெயர்ந்த) பெற்றோருக்குமிடையில் ஏற்படும் இடைவெளியிலும் பார்க்க, முதியோருக்கும் அவர்களின் பேரப்பிள்ளைகளுக்குமிடையில் காணும் இடைவெளிதான் முக்கியமானதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்இவ்விடைவெளியை அவசியம் நிரப்பியே ஆகவேண்டும்.   ஆகவேமுதியோர், பெற்றோர், பேரப்பிள்ளைகள் என மூன்று வெவ்வேறு தலைப்புகளின்கீழ் இவற்றை நாம் ஆராய்வோம்.
முதியோரின் பங்கு:

முதியோரும் அவர்களின் பிள்ளைகளான பெற்றோரும் தங்களுக்குள்ளிருக்கும் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகளுக்கிடையிலுள்ள வித்தியாசங்களை ஓரளவு விளங்கிக் கொள்வார்கள். அவற்றைச் சமாளித்தும் கொள்ளுவார்கள். அவை தவிர்க்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியுமாதலால் ஒருவாறு அனுசரித்து, கண்டும் காணாதவராக விலகிப் போவார்கள்.
      வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் முதியோர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளின் சில நடைவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமலிருப்பது நல்லது. மாற்றிடத்துக்கும் காலத்துக்குமேற்ப அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்வது உசிதம்ஊரிலிருந்தபொழுது ஊறிப்போன பழக்கவழக்கங்களை புலம்பெயர்ந்த இடங்களிலும் பிரயோகிக்க முயற்சித்தால் அது பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.
      பேரப்பிள்ளைகள் சிலவேளைகளில் கோணங்கி உடைகளை அணிந்து காட்சியளிப்பார்கள்இது முதியவர்களின் பார்வைக்குத் தாங்காதுஉடனே ஏதாவது சொல்ல வேண்டும் போலிருக்கும்ஆனால் எதையும் சொல்லக்கூடாதுஅவர்கள் பாட்டில், அல்லது பெற்றோரின் பொறுப்பில், அதை விட்டு விடவேண்டும்.
முதியவர்கள் தங்கள் இளமைப்பருவத்தில், அப்போதைய சூழலில், தாங்கள் அனுபவித்து ரசித்த சங்கீதம், சினிமாப்பாடல்கள், தேவாரங்கள்தாம் திறமானவை என்ற அபிப்பிராயம் அவர்கள் மனதில் வேரூன்றியிருக்கும்அதேவேளை, தற்கால சங்கீதமும் பாடல்களும்தான் இளசுகளின் மனதைத் தொடுவனவாக இருக்கலாம்அதன் காரணமாக சிறிசுகள் பாடினால், அல்லது T.V.  அல்லது D.V.D.  யில் பாட்டுக்களைக் கேட்டு ரசிக்கும் பொழுது முதியோர் அவற்றை ரசிக்காவிட்டாலும், அவையும் காதுக்கிதமாக இருப்பதாகக் கூறி நடித்துக்கொள்ளலாம்.   அல்லது ஏதாவது சாட்டுச்சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிடுதல் நல்லது.     
      பேரப்பிள்ளைகள் படிக்கும்பொழுது அவர்களைக் குழப்பக்கூடிய எதையும் செய்யக் கூடாது. சத்தம்போடுதல், குரலை உயர்த்திக் கதைத்தல், அரட்டையடித்தல்TVயைச் சத்தமாகப் போடுதல், பாத்திரங்கள் தளபாடங்களைக் கையாளுகையில் சத்தம் இவற்றை நேரமறிந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
     
வீட்டில் பிழைகள் எது நடந்தாலும், யார் செய்தாலும் அதற்கு அங்கிருக்கும் முதியோரைத்தான் குற்றம் சாட்டுவார்கள். ஒரு வீட்டில் வயதான பாட்டன் பாட்டி வாழும் பொழுது அந்த வீட்டில் ஏற்படும் முறைகேடுகளுக்கு அவர்கள்தான் காரணம் என்று அவர்கள்மேல் குற்றம் சுமத்துப்படுவது சில இடங்களில் சர்வசாதாரணம்அவற்றை யார் செய்தாலும் முதியோர்மேல்தான் பழி விழும்உதாரணமாக, ஏதாவது கண்ணாடிப் பாத்திரம் அல்லது பீங்கான் கோப்பை விழுந்து உடைந்துவிட்டால், அதை ஒருவரும் நேரே பார்த்திராவிடில் அது முதியவர்களின் தலையில்தான் பொறியும்அதேபோல, வெளிச்சத்தை அல்லது மின்னடுப்பை பிழையாகப்; போட்டால் அல்லது நூர்த்துவிட்டால், படுக்கைக்குப் போகும்பொழுது கதவு யன்னல்களைச் சரியாகப் பூட்டாவிட்டால், தண்ணீர்ப் பைப்பை கெட்டியாக மூடாவிட்டால், தொலைபேசி அழைப்பிற்கு பதில் சொல்லாமிலிருந்தால் அல்லது பிள்ளைகள், பெற்றோர் அதில் பேசிக்கொண்டிருக்கையில் தேவையின்றி அதில் குறுக்கிட்டால் - இவை எல்லாவற்றிலும் முதியவர்களின்பேரில் பழிவிழக்கூடிய சாத்தியக்கூறுகளுண்டுஅவ்வாறு ஏற்படாமல் முதியவர்கள் அவற்றில் தலைப்போடாமலும் தங்கள் செயல்களை கவனமாகவும் நிதானமாகவும் செய்து பழகிக்கொண்டால் எவ்வளவோ மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். பேரப்பிள்ளைகள் கைக்கொள்ளும் சில நடைமுறைகள் முதியோருக்கு ஆச்சரியத்தையும் சிலவேளை சினத்தையும் உண்டாக்கக்கூடும்அதனால், முதியோர்கள் தாங்கள் இளமையில் இருந்த காலத்தைவிட தற்போதைய காலம் வேறு, உலகம் எவ்வளவோ மாறி விட்டது, இது பேரப்பிள்ளைகளின் காலம் - என்பதை உணர்ந்துவிலத்தி நடந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் போகிற வைபவங்களுக்கெல்லாம் தாங்களும் போகவேணுமென்று விரும்பக் கூடாது. முதியோர்கள் தாங்கள் போகவிருப்பமான இடங்களைச் சென்றடைவதற்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகளிடம் போக்குதவியை (lift) எதிர்பார்க்காமல் தாங்களாகவே பொதுப் பிரயாண வசதிகளைத் தேடிக்கொள்வது நல்லது. அதுவும் முடியாவிடில் போகும் ஆசையைக் கைவிட்டு விட்டு, அதைப்பற்றிக் குறைசொல்வதையும் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
பேரன் பேர்த்திகள் நேரங்கழித்து வீட்டுக்குத் திரும்பும் விடயத்தில் பாட்டன் பாட்டி கரிசனை எடுக்கக்கூடாதுஅதைப் பெற்றோரிடம் விட்டுவிடவேணும்.
குடும்பத்தவர்கள் கூடியிருந்து முக்கியமான விடயங்கள் கலந்துரையாடும பொழுது அவர்கள் அழைத்தாலொழிய அக்கூட்டத்தில் தலை நுழைக்காமலிருப்பது புத்திசாலித்தனம்.
வீட்டில்வாழும் மற்றவர்களுக்கு வசதிகுறைவுகள் ஏற்படுத்தாமல் முதியவர்கள் கூடியவரை ஒதுங்கி வாழவேணும்காலையில் பிள்ளைகள் தொழிலுக்கும் பேரப்பிள்ளைகள் பள்ளிக்கும் போவதால், குளியலறை, கழியலறை பாவிப்பதில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேணும்மற்றவர்களின் அவசர தேவைக்கு முதலிடம் கொடுத்து உதவவேணும்.. 
      முதியோரின் சில ஊர்ப்பழக்கங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாகப் பேரப்பிள்ளைகளுக்கு, வெறுப்பைத் தரக்கூடும்உதாரணமாக, காறுதல், செருமுதல், ஏப்பம் விடுதல், உரத்துக் கொட்டாவி விடுதல், வாயுபறிதல், மூக்குத்தோண்டுதல், காதுகுடைதல், பொது இடங்களில் மூக்குச் சீறுதல், கழியலறை பாவித்துவிட்டு கைகழுவாமல் வருதல், உடைகளில் ஒழுங்கீனம் முதலிய பழக்கங்களை முதியோர் கைவிட்டுவிடவேண்டும்.
      மகனுக்கு அவரது வீட்டலுவல்களிலும் மருமகளுக்கு அடுப்படியிலும் கூடியளவு உதவிகள் செய்துகொடுத்தால் அவர்களின் மனம் குளிரும். அதற்குப் பிரதிபலனுமுண்டு. அவ்வாறு உதவி செய்யாதுவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு உபத்திரவமாக இருக்காமல் சீவிப்பது மேல்.
      பேரப்பிள்ளைகளுடன் அன்பாகப் பழகவேண்டும்அவர்கள் தங்களை அசட்டைபண்ணியும் மரியாதை காட்டாமலும் நடந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்ளவேணும்.
பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்குஎன்ற பழமொழிக்கிணங்க தாங்கள் இடம்மாறி வாழும் நாட்டிலிருக்கும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்.
     
பெற்றோரின் பங்கு:
       பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியே அழைத்துவைத்து, அவர்களின் பாட்டன் பாட்டியர் தமது இளமைக்காலத்தில் ஊர்வழக்கப்படி நடந்துகொண்ட பழக்கவழக்கங்களின் நன்மை தீமைகளை விவரித்து அவர்கள் மனதில் அவற்றைப் பதிய வைக்கவேண்டும்.
      அதேவேளை, பேரப்பிள்ளைகள் தாம் வாழும் ஊர் வழக்கங்களோடு ஒத்தோடுதல் மிகஅவசியம்மற்றப் இனப்பிள்ளைகளைப்போல் தாமும் நடந்துகொள்ளாவிடில் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டு விடுவார்கள். அதன் காரணமாக அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் வாழ்க்கையில் விரக்தியும் ஏற்பட இடமுண்டு.
      தற்காலத்துப் பிள்ளைகள் தன்னிச்சையாக நடப்பார்கள்தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற ரீதியில், அவர்கள் மேஜராக வந்ததும் தங்கள் எண்ணப்படி காரியங்களைச் செய்வார்கள். அதற்கு சட்டமும் அனுசரணையாக இருக்கும்ஆயினும் அவற்றைப் பெற்றோர்கள் விலகியிருந்து கண்காணித்துக் கொண்டிருத்தல் அவசியம்.   தங்கள் சொல்லை மீறி பிள்ளைகள் நடந்து கொள்ளும் விடயங்களில் பெற்றோர் தலையிட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்கள் திருப்திப்படும் வரைக்கும், தன்மையாகவும் அன்பாகவும் அவர்களுக்குப் புத்திமதி சொல்லவேண்டும்அந்த வேளைகளில் முதியோர்கள் குறுக்கிடாமல் தூர நின்று கொண்டால் பேரப்பிள்ளைகளின் அன்பைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.
      அநேகமாக சாப்பாட்டு மேசையில்தான் பிரச்சினை கிளம்பும்பேரருக்கு விருப்பமான உணவுவகைகள் முதியோருக்குப் புதிதாக அல்லது அவற்றின் ருசி ஒத்து வராமலிருக்கலாம்சுகாதாரத்துக்கு ஒவ்வாததாக இருக்கலாம்ஆனால் சிறிசுகளுக்கு அது விளங்காதுருசிதான் பிரதானமாகத் தெரியும்.   சில உணவுகளின் தீமைகளைத் தெரிந்து கொண்டாலும்கூட, பாட்டன் பாட்டி தமது பேரப்பிள்ளைகளின் உணவு விடயத்தில் தலையிடாமலிருப்பது நன்மை பயக்கும்.
      சாப்பாட்டில் உள்ளி அதிகம் பாவித்தால் அடுத்தநாள் வியர்வையில் உள்ளிமணம் மணக்கும்அது வெள்ளையர்களுக்குப் பிடிக்காதுவேலைத்தலங்களில், பள்ளிக்கூடங்களில் மற்றவர்களுக்கு உள்ளிமணம் வீசுவது விரும்பத்தக்கதல்லஆதலால் கறிகளுக்கு உள்ளி அதிகம் போடுவதை பேரப்பிள்ளைகள், ஏன், சில பெற்றோருமே விரும்பமாட்டார்கள்ஆனால், உள்ளியும் இஞ்சியும் உணவில் சேர்த்துக கொள்ளவேணும் என்றுதான் முதியோர் விரும்புவார்கள்.      ஆயின், வாய் ருசிக்கும் வியர்வைக்கும் உள்ள தொடர்பை எப்படி நீக்குவது? அதேபோல, உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் வாயுவை உற்பத்தியாக்கும் என்பார்கள். பின்னர் வாயுவை அகற்றத் தனியிடம் தேடிப் போகுமுன்னர் அது தான் முந்துறும்!   
பேரப்பிள்ளைகளின் சில நடைமுறைகள் பிடிக்காவிடில் அவர்களைப்பற்றிப் பெற்றோரிடம் கோள்சொல்வது பல முதியவர்களுக்குக் கைகண்ட பழக்கம். சிலவேளை சிறுவர்களைப் பழிவாங்கும் நோக்குடனும்கூட இது நடக்கலாம்இந்தப் பழக்கம் பிரச்சினையைக் கிளப்புவதுடன் சிலவேளை எல்லோரையும் ஆபத்தில் மாட்டிவிடவும்கூடும்பெற்றோர்தான் சாதுரியமாக இந்த நிலைமையைக் கையாளவேணும்.
ஊரில் அதிகாரத்துடன் வாழ்ந்துவந்த முதியோரைத் திருத்த நினைத்து அவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
தொழில் நேரம்தவிர்ந்த மற்றநேரங்களில் எங்காவது வெளியில்  போகும்பொழுது தருணம் அறிந்து, வசதிபார்த்துமுதியோரையும் அழைத்துப்போவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முதியோருக்கு விருப்பமான, அவர்கள் சுவைத்து சாப்பிடக்கூடிய, உணவு வகைகளை இடைக்கிடை அவர்களுக்குப் பரிமாறிக்கொள்வது நன்மை பயக்கும்.
சில சிக்கலான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு முதியோரின் புத்திமதிகள் பலனளிக்கும் என்று உணர்ந்தால் அவர்களை அணுகி அவர்களுடன் கலந்தாலோசித்தால் அவர்களுக்கு அது தேனாக இனிக்கும்..
தமது பிள்ளைகளின் சுகாதாரத்தைக் கவனிப்பதுபோல முதியவர்களாகிய தமது பெற்றோரின் சுகநலன்களையும் தொடர்ந்து கவனித்துவரவேணும்அவர்களின் வயதுக்கேற்ற வியாதிகள் வரும்பொழுது காலந் தாழ்த்தாமல் அவர்களை மருத்துவரிடமோ மருத்துவ மனைக்கோ கூட்டிப்போய்க் காட்டி, ஆவன செய்யவேணும் 
பாட்டன், பாட்டியிடம் மரியாதைகாட்டி நடந்து கொள்ளவேணும், தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல் செய்யவேணும்.   முதியவர்களுக்குக் கழியலறை தேவைப்படும் நேரங்களில் அவர்களின் தேவைக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கவேணும்ஏனெனில் முதுவயதில் அவர்களால் இயற்கை உபாதியைத் தாமதிக்கவோ தாங்கிக்கொள்ளவோ முடியாது என்பதை நினைவிற் கொள்ளவேணும்பிள்ளைகளுக்கும் அதைப் புரிய வைக்கவேணும்.
      பேரப்பிள்ளைகள் சிறுவர்கள்தாங்கள் செய்வதும், சொல்வதும் சரியென்றே அடம்பிடிப் பார்கள்முதியவர்கள்தான் பெரிய மனதுடன் அவர்களின் எண்ணப்படி விட்டுக்கொடுக்க வேண்டும்பெற்றோரும் அவர்களுக்கு விடயத்தை விளக்கி சமாதானம் ஏற்படுத்திவிடவேண்டும்.
      புலம்பெயர்ந்து வந்து தம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளுக்குமிடையில் நின்றுகொண்டு இடிபடவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. அந்தப்பக்கம் தாய் தகப்பன்; இந்தப்பக்கம் தங்கள் அருமைப்பிள்ளைகள்பிள்ளைகளின் நலனைக் காக்கவேண்டியதும் அவர்களைத் திருப்திப்படுத்துவதும் அவர்களின் பிரதான தேவையும் கடமையுமாகிறது.
சுருக்கமாகச் சொன்னால், சொந்த ஊரைவிட்டு தாங்கள் ஏன்தான் இங்கு புலம்பெயர்ந்து வந்தோம் என்று முதியவர்கள் நினைக்கவோ கவலைப்படவோ இடமளிக்கக்கூடாது.
     
பேரப்பிள்ளைகளின் பங்கு:
பேரப்பிள்ளைகளின் வாழ்க்கைமுறை வித்தியாசமானதுஅவர்கள் புதிய சூழ்நிலையில் வளர்ந்து, சுயமாகச் சிந்தித்து, சுதந்திரமாக வாழ்பவர்கள்அவர்களின் உலகமே வேறு. தினமும் அதிக நேரம் பிற சமுதாயத்தவர்களின் நவீன பழக்கவழக்கங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரை தங்கள் பாட்டன் பாட்டிகளினுடைய பழக்கவழக்கங்களிற் பெரும்பாலானவை அவர்களுக்கு ஏற்புடையனவாயிராஅவைகள் மூடநம்பிக்கையையும், அறியாமையையும் அடித்தளமாகக் கொண்டன என்பது அவர்களின் விவாதம்உதாரணமாக, நாளும் கிழமையும் பார்த்து அலுவல்களைத் தொடங்குவது, திருநீறு பூசுவது, சகுனம் பார்த்தல், மூத்தோரைக் கனம்பண்ணுதல், ஊரில் உடுத்துப்பழகிய உடைகளைப்போல இங்கும் அணிந்துகொள்ள விரும்புவது - இவைபோன்ற பல பழக்கங்களை இங்குள்ள இக்காலத்தைய சிறிசுகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்எதுக்கும் காரணம் கேட்பார்கள்ஒவ்வொன்றுக்கும் தகுந்த காரணம் கூறி அவர்களைத் திருப்திப்படுத்துவது முதியோருக்கு முடியாத காரியம்; சட்டமும் சிறுவர் பக்கந்தானே சார்பாக இருக்கிறது!
பிள்ளைகள் T.V. பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது மற்றவர்கள் வேறொரு நிகழ்ச்சி பார்ப்பதற்காக T.V.அலையை மாற்றச் சொன்னால் அப்படி மாற்றமுடியாதென்று அடம்பிடிப்பார்கள்.
சில பேரப்பிள்ளைகள் தங்கள் வீட்டில் பாட்டன் பாட்டி இருப்பதை ஒரு தொல்லையாக நினைப்பார்கள்அவர்கள் ஏதாவது உதவி கேட்டால் செய்து கொடுக்கமாட்டார்கள். ஏதும் சாட்டு போக்கு சொல்லி விலகிவிடுவார்கள்அதற்குக் காரணம் முதியவர்களின் நடைமுறைகளாக இருக்கலாம்அவர்கள் பேரருடன் அன்பாகவும் விட்டுக்கொடுப்புடனும் பழகியிருந்தால் இந்த வெறுப்பு வளர்ந்திருக்காதுமுதியோருக்கு அவர்களின் வயதிற்கேற்ற மனநிலையும் பழக்க வழக்கங்களும் இருக்கும், அவற்றை அவர்கள் கைவிடுவது ஸ்டம் என்னும் உண்மையை பெற்றோர்தான் பிள்ளைகளின் மனதில் பதியவைக்கவேண்டும்.

குடும்பத்தில் முதியோரின் பங்கு:
ஒரு வீட்டில் திருமணமாகிய புதுத்தம்பதிகள் குடியிருப்பார்கள்அவர்களுடன் அவர்களின் பெற்றோரும் வசிப்பார்கள் - அநேகமாக ஒரு தம்பதியின் பெற்றோர்தான்தம்பதிகள் புதிதாக இருக்கும் பொழுதே பெற்றோர் வீட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக கொள்வார்கள். தம்பதிகளும் அனுபவம் இல்லாதபடியால் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு இசைவாக நடந்து கொள்ளுவார்கள்பெற்றோரும் கொஞ்சக் காலத்துக்கு விட்டுப்பிடிப்பது போலக்காட்டி அவர்களுக்கு அன்பாகவும், ஆதரவாகவும் வழிகாட்டிகளாக நடப்பார்கள்சில மாதங்கள் கழிந்ததும், பெற்றோர் தாங்கள் சொன்னபடி பிள்ளைகள் நடக்காவிடில் சற்றுக் கோபித்தும், கடிந்தும் தங்கள் எண்ணப்படி அவர்களை நடப்பிப்பார்கள்.
            தம்பதிகளுக்குப் பிள்ளைகள் பிறக்கும்பெற்றோரும் கொஞ்சி விளையாடுவார்கள்அத்துடன் பேரப்பிள்ளைகளையும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து அதில் வெற்றியும் காண்பார்கள்ஏனெனில், தம்பதிகள் தங்கள் மற்றைய அலுவல்களைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளையும் தாமே பராமரிப்பது கஷ்டம் என்றபடியால் பெற்றோரின் துணையும் உதவியும் இன்றியமையாததாகத் தோன்றும்இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அந்தப் பேரப் பிள்ளைகளையும்   வழிநடத்தும் பாவனையில் அவர்களையும் தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்துவிடுவார்கள்இதே மாதிரி, அவர்களுக்குப் பூட்டப்பிள்ளைகள் பிறந்ததும், அவர்களையும் ஆட்சி பண்ணுவது பாட்டன் பாட்டியாகததானிருக்கும்.
            ஆகவே, பிள்ளையைத் திருமணம் செய்துகொடுத்த நாள் தொடக்கம் தாங்கள் கட்டையில் போகும்வரை பெற்றோரின் ஆதிக்கம்தான் அந்தக் குடும்பத்தில் நடக்கும்அதற்குக் குறுக்கே எந்தத் தடைகளும் வருவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்அப்படி ஏதாவது இடையூறுகள் வந்தால் தாங்கள் வேறாகப் போவதாக வெருட்டியோ, சாகிறேன் என்று பயமுறுத்தியோ தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளுவார்கள்.   தம்பதிகளும் தங்கள் பெற்றோருக்கு நன்றிக்கடன், அவர்களின் தள்ளாத வயது, சமூகத்தின் கலாச்சாரம், பாவபுண்ணியம், இவைகளை எண்ணி அவர்களுடன் முரண்பிடிக்காமல், ஒருவாறு சமாளித்துக் கொண்டுகாலத்தைக் கடத்திச் செல்வர். உடம்பில் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு, பின்னர் அரைப்பு, சிகைக்காய் தேய்த்து முழுகினால் அன்று தம்பதிகளைச் சேர பெற்றோர் விடமாட்டார்கள்உடனே சன்னி வியாதி பிடித்துவிடும் என்ற பயம்.
அநேகமானவர்கள் தங்கள் முதிர்ந்த வயதில், அதாவது நரை, திரை, மூப்பு ஆகிய மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கும் காலத்தில், மற்றவர்களுக்குப் பிடிக்காத சில பழக்க வழக்கங்களைத் தவிர்க்கமுடியமாலிருப்பது இயற்கைஅதாவதுதுப்புதல், காறுதல், செருமுதல், ஏப்பம் விடுதல், மூக்குச் சீறுதல், தும்முதல், இருமுதல்  முதலிய பழக்கங்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியாதுஅந்தப் பழக்கங்களைச் சகித்துக்கொண்டு பெற்றோரிடம்; அன்புகாட்டி தொடர்ந்தும் அவர்களைப் பராமரித்து வரும் பிள்ளைகளைப் போற்றாமல் இருக்கமுடியுமாபெற்றோர் செய்த தவம்தான் பிள்ளைகள் பொறுமையுடன் அவர்களுக்குச் சேவைசெய்வது.
            ஒரு குடும்பத்தின் தலையாரி எப்பொழுதும் முதியவராகத்தான் இருப்பார்அவர் சொற்படிதான் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் எவரும் நடப்பார்கள், நடக்கவேண்டும்வெளியிலிருந்து யாராவது அலுவலாக வந்தால் முதியவரைக் கலந்தாலோசிக்காமல் எந்த நடைவடிக்கையிலும் அந்தக் குடும்பத்தினர் இறங்கமாட்டார்கள்வீட்டுத் தலைவனுக்கு அவ்வளவு சக்தி குடும்பத்திலுண்டுஅவரது சொல்லை அல்லது புத்திமதியை மீறினால், பெரிய கலாட்டாப்பண்ணி, கத்திக்குளறி, அயலாரைக் கூப்பிட்டு, தர்க்கம் பண்ணி, தனது நியாயத்தை நிலைநாட்டிக்கொள்ளுவார்.
            இவ்வளவு ஆதிக்க சக்தி முதியவருக்கு எப்படி வந்தது என்று யோசிக்க இடமுண்டல்லவா!   அதற்கு மூலகாரணம் அவர் தனது வாழ்க்கையை வாழ்ந்த விதம்தான்தனது வாழ்நாளில் பிரயாசை, தர்மம், நீதி, சிக்கனம், எளிய சீவியம், இவற்றில் கட்டுப்பாடாகவும் உண்மையாகவும் சீவித்தபடியால், தான் சொல்வதும் செய்வதும் சரியாகவே இருக்கும் என்ற தன்நம்பிக்கைதான் அவருக்குத் தூண்டுகோலாகும்அத்துடன்,   தங்கள் பெற்றார் பாட்டன்(பாட்டி)யின் வாழ்க்கை புனிதமானதும், குறைபாடில்லாததும் தானே என்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும்   ஏற்றுக்கொண்டு அவர்கள் இட்ட சட்டத்துக்கு மறுவார்த்தை பேசாமல் ஒத்துழைப்பு நல்கிஅவர்களுக்கு மதிப்புக் கொடுத்து,   அவர்களின் வழிகாட்டலின்படி நடந்து கொள்வார்கள்குடும்பத் தலைவனைப் போற்றி, அவரைத் தெய்வத்துக்கு அடுத்தபடியாக வைத்துக் கனம் பண்ணினார்கள் அந்தக்காலத்து மக்கள்.   அதற்கு அவரின் நன்னடத்தைதான் காரணம் எனலாம்.


60லிருந்து – 100வரை சுகதேகியாக இருப்பது எப்படி?

இதுதான் இன்றைய முதியோர் சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரையும் அரித்துக் கொண்டிருக்கும் கேள்விஇந்தக் கேள்வி எமது தாய்நாட்டில் வசிக்கும், வசித்துவந்த, வயோதிபர்களிலும்பார்க்க புலம்பெயர்ந்திருக்கும் முதியவர்களுக்குத்தான் கூடப்பொருந்தும்.

அவர்கள் சாதாரணமாக தங்கள் வீடுகளில் தினசரி ஏற்படும் சுகநலக் கோளாறுகள் ஒவ்வொன்றிற்கும் வைத்தியர்களிடம் போய் யோசனையும் Treatmentஉம் கேட்பதோ, மருந்துகள் வாங்கி உட்கொள்வதோ அனுபவரீதியாக அவர்களுக்குச் சிரமமான காரியம்.
தமது உடம்பைத் தாமே பேணுவதில் மிகவும் கவனமாக இருக்கவேணும்.  Daily light exercises.  Daily walking or cycling or swimming புகையும் குடியும் தவிர்.  காலையில் நித்திரை விட்டெழுந்ததும் 3 கப் தண்ணீர் அருந்தி விட்டு கொழுப்புக் கலந்த ஆகாரங்களைத் தெரிந்து, அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

வயதாளி என்ற எண்ணம்:
தான் வயதாளி என்று அடிக்கடி தோன்றும் எண்ணத்தை அறவே களைந்தெறிந்து விடவேண்டும்வயதைப்பற்றி நினைக்கவோ மற்றும் இளைஞர்களுடன் ஒப்பிடுவதையோ நிறுத்திவிடவேண்டும்
60 வயதைத் தாண்டியதும் எம்மிற் பலர்நான் இப்போது வயோதிபன்மற்றவர்களைப் போல் நான் இனி நடமாட முடியாதுஅப்படி நடந்துகொள்ளவும் கூடாதுநான் திறமாகச் செயல்படுவேன் என மற்றவர்கள் எதிர்பார்ப்பதும் பிழைஎனக்கு இனி கைமூட்டு, முழங்கால் வலி வந்துவிடும் என எதிர்பார்த்திருக்கவேணும்நான் அதிக தூரம் நடக்கமாட்டேன்கடினமாக வேலைகள் செய்யமுடியாதுஅடிக்கடி ரெஸ்ட் எடுக்கவேணும்என்றெல்லாம் எண்ணிக்கொள்வதுண்டு. அந்த விதமாக எண்ணுவது தப்புஎது செய்ய முனைந்தாலும், எவருடனும் பேசிக் கொண்டிருக்கும்பொழுதும் தனது வயதை மனதிற்கொள்ளுதல் ஆகாதுநமது செயற் திறனைப் பொறுத்துத்தான் எம்மைப்பபற்றி மற்றவர்களின் மதிப்பு அமையும்.  “எனக்கு வயதாகிவிட்டதுஎன்ற எண்ணத்தை மனதிலிருந்து முற்றுமுழுதாக அகற்றிவிடவேண்டும்.

மறந்துதானும் கணவனின் குறைகளை மனைவிக்கும், மனைவியின் குறைகளை கணவனுக்கும் புகார் செய்யக்கூடாதுஅவர்கள் தங்களுக்குள் எவ்வளவுதான் புடுங்குப்பட்டாலும் மூன்றாமவர் விடயத்தில் வரும்போது அவர்கள் ஒற்றுமை!

முதியவர்கள் கூடியவரை தங்களுக்கு ஏதும் வியாதிகள் வராமற் பார்த்துக்கொள்ள வேணும். வியாதி வந்துவிட்டால், அவர்களைப் பராமரிப்பது இக்காலத்தில், அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில், மிகவும் ஸ்டம்மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எவரும் முன்வந்து உதவுவதற்கு அவர்களுக்கு நேரமும் அவகாசமும் கிடையாது.
ஆகவே, மேற்கத்திய நாடுகளில் Nursing homes, Aged care homes, Retired living quarters  என பலதரங்களில் அமைத்துவிட்டிருக்கிறார்கள். அவை முதியவரின் பணவசதி, அவரது நோயின் ரகம், என்ன விதமான உதவி அவருக்குத் தேவை என்பதைப் பொறுத்து அவரவருக்கு ஏற்ற தரமுள்ள விடுதிகளில் அவரைச் சேர்த்துவிடுவார்கள்இவை அரசாங்கத்தின் ஏற்பாடுகளாகும். இவற்றைவிட, தனியார் விடுதிகளுமுண்டு.

நீங்கள் உங்கள் வாழ்நாளில் கடைப்பிடித்த இறுக்கமான கொள்கைகளும் கோட்பாடுகளும் வாழ்க்கைக்கும் தேக சௌக்கியத்துக்கும் நன்மை பயக்குவனவாக இருந்திருக்கலாம்ஆனால் அவற்றை உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளும் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாகாது.

தொடரும்...


2 comments:

  1. //ரேசளiபெ hழஅநளஇ யுபநன உயசந hழஅநளஇ சுநவசைநன டiஎiபெ ஙரயசவநசள//

    இது ஒரு தட்டச்சுப் பிழை என்று கருதுகின்றேன். இவைகளைத் தவிர்க்க முடியுமா?

    ReplyDelete
  2. பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இது bamini font இல் இருந்து unicode இற்கு மாற்றியபோது ஏற்பட்டுவிட்டது. திருத்தியுள்ளேன்.

    ReplyDelete