கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
(ஜூன் 2012 வல்லினம்
சஞ்சிகையில் வந்தது. பொருத்தப்பாடு கருதி மீண்டும்)
அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தனது 12வது எழுத்தாளர்விழாவை, மே மாதம்
மெல்பேர்ணில் கொண்டாடியுள்ளது. இயந்திரமயமான வாழ்விலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு
வருடமும் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மெல்பேணில்
தமிழுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் என்றவுடன் இருவரைக் குறிப்பிடாமல் இருக்க
முடியாது. ஒருவர் லெ.முருகபூபதி, இலங்கையில் சர்வதேச எழுத்தாளர்விழாவை முன்னின்று
நடத்தியவர். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழாவின் மூலகர்த்தா. மற்றவர்
இப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராக இருக்கும்
சு.ஸ்ரீகந்தராசா. இவரும் ஈழம் தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம்
போன்றவற்றில் தலைவராக இருந்தவர். ஆரம்பகாலம் முதல் தமிழ் எழுத்தாளர்விழாவுடன்
தொடர்புடையவர். இவர்களுடன் கலைவளன் சிசு.நாகேந்திரன், மாத்தளை சோமு, கவிஞர்
இளமுருகனார் பாரதி, ஓவியர் ஞானம், திருநந்தகுமார், திருமதி கனகமணி அம்பலவாணர்,
மதுபாஷினி (ஆழியாள்), அருண் விஜயராணி, சண்முகம் சபேசன், செந்தூரன், மு.நந்தகுமார்,
செல்வபாண்டியன், சட்டத்தரணி செ.ரவீந்திரன், எஸ்.கொர்னேலியஸ், என்.எஸ்.நடேசன்,
விமல் அரவிந்தன், 'வானொலி மாமா' நா.மகேசன், க.சிவசம்பு, மாலதி, கெளசல்யா,
கிருஸ்ணமூர்த்தி எனப் பலர் இம்முறை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.