Friday, 13 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 12 - டயரிக் குறிப்புகள்

ஆலினை இப்பொழுது பலரும் கூறு போடத் தொடங்கிவிட்டார்கள்.

நந்தனுக்கு அவள் மீதிருந்த பிடிமானம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.

அப்பொழுது ஃபுங் அங்கு வந்து சேர்ந்தாள். ரொப் கோற்றில் பெயின்ற் மணம் தனக்கு ஒத்துவரவில்லை என்பதைக் காரணம் காட்டி ‘எண்ட் ஒஃப் லைனிற்கு மாற்றம் கேட்டு வந்திருந்தாள்.

ஃபுங் தினம் ஒரு பெர்ஃவியூமுடன் வருவாள். தினம் அவள் போடும் ஹெயர் ஸ்ரைல் யாரையும் கவர்ந்திழுக்கும். ஒன்றுக்கு மூன்று வளையங்கள் காதில் தொங்கும்.

தொழிற்சாலை விதிகளின்படி ஓவரோல் ஒருவரின் மணிக்கட்டுவரை நீண்டிருக்க வேண்டும். ஆனால் புங் தன் ஓவரோலை முழங்கை வரையும் மடித்திருப்பாள். அப்படியே பாதங்கள்வரை நீண்டிருக்கவேண்டியதை இரண்டு மடிப்புகள் மடித்திருப்பாள். தொழிற்சாலைத் தொப்பியைக்கூட அணியமாட்டாள். குச்சி, நைக் போன்ற பிறாண்ட்நேம் தொப்பிகளைத்தான் அணிந்து கொள்வாள்.

அவளைப் பார்க்கும் ஒருவருக்கு நிட்சயமாக திரைப்பட நடிகை ‘ஷோபா வந்து போவாள். நந்தனுக்கும் ஷோபா கண்ணுக்குத் தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் நந்தன் தனிமையில் இருந்தபோது, அவள் தன்னைச் சந்திக்க வந்திருப்பது போல உணர்ந்தான் ஏழெட்டு வருடங்கள் அங்கு வேலை செய்து விட்டான். இருந்தும் அவன் மனம் சஞ்சலப்பட்டது.

“நீர் ஒரு ஆள்தான் இன்னமும் ஆலினை நம்பிக்கொண்டிருக்கின்றீர்! நந்தனைப் பார்த்து ஃபுங் சொன்னாள். நந்தன் அதற்கு ஒன்றும் சொல்லாமல் மெளனம் காத்தான்.

புங்கின்மீது நந்தன் தனது மனத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டு வந்தான். இருப்பினும் வஞ்சுரம் கொண்டவன்போல மனத்தை இறுக்கமாக வைத்திருந்தான். ஆனால் சமயத்தில் அது உடைந்து போகவும் கூடும் எனப் பயப்பட்டான். மனம் என்பது இளகியதும், உடைந்து சுக்கு நூறாகிப் போகும் கண்ணாடி போன்றதுமானதெனவே அவன் நினைத்திருந்தான்.

ஆலினிற்கு Kelly Clarkson இன் ‘Because Of You’ என்ற பாடல் பிடிக்கும் என்றால், புங்கிற்கு Shakira வின்  Whenever, Wherever  என்ற பாடல் பிடிக்கும். நந்தனுக்கு இப்பொழுது ஷக்கிராவின் பாடலே பிடித்தது. புங்கும் ஆலினும் வெளியில் சந்தோஷமாகக் கதைத்தாலும், உள்ளுக்கு விரோதிகளாக மனம் புளுங்கியவர்களாகவே இருந்தார்கள்.

வாழ்க்கைதான் எத்துனை சூச்சுமங்கள் நிறைந்தது. பூடகமானது. அது சில சமயங்களில் கண்ணாமூச்சியும் விளையாடுகின்றது.

ஒருவன் தன் வாழ்நாளில் எத்தனை பெண்களைத்தான் விரும்ப முடியும்? ஒருவருக்கு இன்னொருவரைப் பிடித்துவிட்டால் எதுவுமே சொல்ல முடியாது. பதினாறு வயதென்ன... நாற்பது வயதுப்பெண்கள்கூட ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்கள். எதுவுமே மனிதர்களிடம் இல்லை. எல்லாமே மனசுதான் என்றாகிப் போனது நந்தனுக்கு.

இருந்தாலும் சில இயல்புகளில் நந்தனுக்கு புங் மீது வெறுப்பு ஏற்பட்டது.

அவளின் பார்வையில் எப்படி உழைத்தால் என்ன? காசு  சேர்க்க வேண்டும். செலவழிக்க வேண்டும். படாடோபமாக வாழ வேண்டும். தன்னை உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை பத்தாயிரமோ இருபதாயிரமோ வருஷத்திற்குச் செல்வழித்து பிறைவேற் ஸ்கூலில் போட்டு விடுவாள். அத்துடன் தன் கடமை முடிந்தது என இருந்து விடுவாள். படிக்கின்றார்களோ இல்லையோ அது அவர்கள் பொறுப்பு. அதே போலத்தான் சாப்பாட்டு விஷயத்திலும். “நான் தினமும் சமைத்து வைக்கின்றேன். போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே! என்பாள்.

எல்லா இயல்புகளையும் ஒரு மனிதரிடத்தில் எதிர்பார்க்க முடியாதுதானே! அவளிடம் கருணை உண்டு. எதையும்  சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாமல் சமாளிக்கும் திறமை உண்டு. அடுத்தவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை, சுறுசுறுப்பு, குரல் இனிமை, சங்கீதத்தில் விருப்பு, சமையல் திறன்... அதைவிட அழகு.

நந்தன் ஆலினை நம்பவில்லை. அவள் மீது பரிதாபப்பட்டான்.

ஹெரோயின், கொக்கேயின், மார்ஜூவானா, தர்கா, அபின், எஸ்டிடி, ஓபியம், குடு போன்ற எல்லாப் போதைப் பொருட்களிற்கும் ஆலின் அடிமையானாள். ஆரோக்கியம் கெடத் தொடங்கியது. போதைப் பொருட்கள் உடலின் நரம்புப்பகுதியையும் உள்ளுறுப்புகளையும் தாக்கி அவளது உடலை உருக் குலைத்தது. அவளின் அழகு குறையத் தொடங்கியது. கவர்ச்சி மங்கியது. உடல் வலுவிழந்தது. ஒரு தேவதையைப் போல அந்தத் தொழிற்சாலைக்கு வந்தவள், இன்று தேவதாசி போல் ஆகிவிட்டாள்.

கொப்பி ஒன்று வைத்து வேலை செய்யும் நேரங்களிலெல்லாம் ஏதோ எழுதத்தொடங்கினாள். கூச்சமில்லாமல் கெட்ட வார்த்தைகளும் பேசப் பழகிக் கொண்டாள்.

"என்ன எழுதுகின்றாய்?"

"ஒவ்வொரு நாளும் நடப்பதைப் பற்றி எழுதுகின்றேன்."

"ஏன் எழுதுகின்றாய்?"

"ஒரு சான்றுக்குத்தான்"

அவளது போனிற்கு நிறைய குறும்தகவல்கள் வரத்தொடங்கியது. அதற்கு பதில் போட்டாள். தனக்குள் சிரித்தாள்.

வேலை செய்வதில் ஒரு புதிய முறையை நடைமுறைப்படுத்தினாள். ஒரு கையில் மொபைல் ஃபோன். மறுகையால் வேலை. குறும் செய்திகள் மோபைல் ஃபோனிலிருந்து பறக்கும். சிலவேளைகளில் தீவிரமாக எஸ் எம் எஸ் அனுப்பிக் கொண்டே இருப்பாள். மொபைல் ஃபோன்கள் விதம் விதமான வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கும். ஒருமுறை பென்னாம் பெரிய சைஷில், கடைகளில் கவுண்டர் அருகே இருக்கும் கல்குலேட்டர் வடிவம்போல வந்தது. மெசேஜ் அனுப்புவதற்கு மிகவும் ஈஷி என்பாள். அடுத்தநாள் கண்ணுக்குத் தெரியாத சைஷில் வரும். அதற்கு ஒரு குச்சி கொண்டு தட்டுவாள்.

இவ்வளவு நாளும் என்னுடன் நன்றாகப் பழகியவர், இப்ப என்னைத் தெரியாது என்று சொல்லுகின்றார். அது ஏன்? இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா? என்று ஒருநாள் நந்தனிடம் திடுதிப்பாகக் கேட்டாள் ஆலின். அவள் நந்தனிடம் அப்படிக் கேட்ட்தை ஃபுங் அவதானித்துக் கொண்டாள்.

“உவளுக்கு விசர். அதுதான் எண்டு சொல்லும்என்று நந்தனின் காதிற்குள் சொன்னாள் ஃபுங். அவளது கையில் ‘stress ball’ ஒன்று நசுங்கியபடி இருந்தது.

சமயங்களில் ஃபுங் அசைவமாகவும் கதைப்பாள். அவளது பேச்சு இரட்டை அர்த்தங்கள் கொண்டது.

“Can I have it” என்று அந்தப் பந்தைப் பார்த்துக் கேட்டான் நந்தன்.

“ஏன் ஆலினிடம் பெரிய பந்து இருக்கு. கேட்டுப் பார். தருவாள், உன் stress பறந்து போகும் என்றாள் ஃபுங்.

ஆலினது வாழ்க்கை பயங்கரத்துக்குள் நழுவிப் போய்க் கொண்டிருந்தது.

அவளுக்கு இப்போது வாழ்க்கையும் இல்லை, சந்தோசமும் இல்லை. எல்லோராலும் கைவிடப்பட்டவளானாள். தனிமையும் ஏக்கமும் தினமும் அவளை வாட்டின. அவளின் வாழ்க்கை ஓயாத சமரைப் போன்றது. தினமும் ஒவ்வொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கலானாள்.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டிற்குப் போனதும் மூன்று வோட்கா குறூசர் குடிப்பாள். சிகரெட் ஊதித் தள்ளுவாள். புதிய பாட்னருடன் போக்கீஸ், கிளப் என்று உல்லாசம் கண்டாள். அவனது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. அவன் வேலையை இழந்தான். ஆலின் தனக்கொரு குழந்தை இருப்பதை மறந்தாள்.

மூன்று கிழமைகளாக ஆலின் வேலைக்கு வரவில்லை. அதன் பிறகு ஒருநாள் வந்தாள். நாள் முழுவதும் அழுதபடி இருந்தாள்.

அவளின் புதிய பாட்னருக்கு தினமும் குடித்து வெறித்து மகிழ வேண்டும். எந்த நேரமும் செக்ஸ் வேண்டும். போக்கர் மெஷின் விளையாட வேண்டும்; கிளப் போக வேண்டும். ஆரம்பத்தில் குடித்து முடிய கார் ஓடுவதற்கு ஆள் வேண்டும் என்பதால் ஆலினையும் அழைத்துக் கொண்டு போவான். வேலையால் களைத்து வந்திருக்கின்றாளே என்ற கவலை எதுவும் அவனுக்குக் கிடையாது. அவன் வேலைக்குப் போவதும் கிடையாது. ஆலினின் உழைப்பிலேதான் எல்லாவற்றையும் அனுபவித்தான். விடிய மூன்று நான்கு மணிக்கெல்லாம் சுற்றுவான். பகல் பகலாகப் படுத்துக் கிடப்பான். ஆலினுக்கும் குடிக்கக் கொடுத்து, தானும் குடித்துக் கூத்தாடினான். அவனது கார் லைசென்ஸ் பறி போனது.

ஒருநாள் இரவு 'எல்லாவற்றையும்' அனுபவித்து முடிய, ஆலினுடைய உடமைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு கம்பி நீட்டி விட்டான். விடியற்புறம் எழுந்த போது வீடு வெறிச்சோடிக் கிடந்தது. அவளின் கிறடிற் கார்ட், பேர்ஸ் எல்லாவற்றையும் வழித்து எடுத்துக் கொண்டு பறந்திருந்தான். கிறடிற் கார்ட் துலைந்த செய்தியை பாங்கில் சொன்ன போது நாலாயிரம் டொலர் மறைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு கிறடிற் கார்ட் தரமுடியாது என்று வங்கி நிர்வாகம் ஆலினுக்கு சொன்னது.

ஒருநாள் ஆலினின் டயரி திறந்து கிடந்தது. அதை யாரும் பார்க்கக்கூடும் என்ற எண்ணமும் அற்று போட்டதைப் போட்ட இடத்தில் விட்டுவிட்டுப் போய்விடுவாள். இப்படித்தான் தினமும் ஏதாவதொன்றை விட்டுவிட்டு வீட்டிற்குப் போய் விடுவாள். மறுநாள் அங்கு வந்து பார்த்தால் கிடைக்காது. பகல் வேலை செய்பவர்கள் எது என்றாலும் தூக்கி எறிந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள். “மார்பகங்களைக் கழற்றி வைக்க முடியுமென்றால் அதையும் கழற்றி வைத்துவிட்டுப் போய் விடுவாள்என்று வேலை செய்யும் சக நண்பன் ஹா அடிக்கடி சொல்லுவான்.

டயரியின்மீது நந்தனின் கண்பார்வை விழுந்தது. ஆச்சரியப்பட்டுப் போனான் நந்தன். அந்த டயரியில் ஆலின் தினமும் யார் யாருடன் எங்கு போகின்றாள்; என்ன செய்கின்றாள் போன்ற விபரங்கள் அடங்கிக் கிடந்தன. அவசர அவசரமாகத் தட்டிப் பார்த்தான்.

மக்காறியோவுடன் தொடங்கிய டயரி – ரிம்ராம், ஹா, ஹெவின், ஸ்ரிபன் என்ற தெரிந்த பெயர்களும், பல தெரியாத பெயர்களும் அடங்கிக் கிடந்தன. இத்தனை ஆண்களா? அவர்களுடன் தான் கொண்ட ஊடல் கூடல் போன்ற பல சுவாரஸ்யங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. சில இடங்களில் கோடிட்டிருந்தாள், ஸ்ரார் போன்ற குற்யீடுகள் இட்டிருந்தாள்.

..... இப்படியாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது ஆலினின் டயரி.


“Whenever, wherever”


Lucky you were born that far away so
We could both make fun of distance
Lucky that I love a foreign land for
The lucky fact of your existence

Baby I would climb the Andes solely
To count the freckles on your body
Never could imagine there were only
Ten million ways to love somebody

Can't you see
I'm at your feet

Whenever, wherever
We're meant to be together
I'll be there and you'll be near
And that's the deal my dear
There over, hereunder
You'll never have to wonder
We can always play by ear
But that's the deal my dear

Lucky that my lips not only mumble
They spill kisses like a fountain
Lucky that my breasts are small and humble
So you don't confuse them with mountains

Lucky I have strong legs like my mother
To run for cover when I need it
And these two eyes that for no other
The day you leave will cry a river
At your feet
I'm at your feet

Whenever, wherever
We're meant to be together
I'll be there and you'll be near
And that's the deal my dear
Thereover, hereunder
You'll never have to wonder
We can always play by ear
But that's the deal my dear

Think out loud
Say it again
Tell me one more time
That you'll live
Lost in my eyes

Whenever, wherever
We're meant to be together
I'll be there and you'll be near
And that's the deal my dear
There over, hereunder
You've got me head over heels
There's nothing left to fear
If you really feel the way I feel

Whenever, wherever
We're meant to be together
I'll be there and you'll be near
And that's the deal my dear
There over, hereunder
You've got me head over heels
There's nothing left to fear
If you really feel the way I feel





இன்னும் வரும்...

No comments:

Post a Comment